”நான் மடிந்துவிடவில்லை; என் குரல் ஒலிக்கும்!” - புதுச்சேரி பிரசாரத்தில் நாஞ்சில் சம்பத் ஆவேசம் | Nanjil sambath in puducherry Election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (27/03/2019)

கடைசி தொடர்பு:09:32 (28/03/2019)

”நான் மடிந்துவிடவில்லை; என் குரல் ஒலிக்கும்!” - புதுச்சேரி பிரசாரத்தில் நாஞ்சில் சம்பத் ஆவேசம்

”மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க அரசை வீழ்த்துவதற்காகவே மீண்டும் களத்திற்கு வந்திருக்கிறேன்” என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்திருக்கிறார்.

”மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க அரசை வீழ்த்துவதற்காகவே மீண்டும் களத்திற்கு வந்திருக்கிறேன்” என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்திருக்கிறார்.

நாஞ்சில் சம்பத்

மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. புதுச்சேரியில், காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் முதல்வரும் சபாநாயகருமான வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து இன்று புதுச்சேரி முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் நாஞ்சில் சம்பத். தவளக்குப்பத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பேசிய அவர், “கட்சி அரசியலில் இருந்து விலகியிருந்த நான், கடந்த ஓராண்டாக இலக்கியப் பணியில் ஈடுபட்டிருந்தேன். இந்தத் தேர்தலில் பா.ஜ.க அரசை வீழ்த்தும் களத்தில் இல்லையென்றால், நான் உயிருடன் இருப்பதற்கு அர்த்தமில்லை என்பதை உணர்ந்தேன்.

மக்களவைத் தேர்தல்

அதனாலேயே, மீண்டும் தேர்தல் களத்திற்கு வந்திருக்கிறேன். நான் மடிந்துவிடவில்லை. பாசிசத்திற்கு ஆதரவாகச் செயல்படுபவர்களுக்கு எதிராக என் குரல் ஒலிக்கும். ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தத்தில் 30,000 கோடி அளவிற்கு ஊழல் செய்திருக்கும் மோடி, இந்தியாவின் பன்முகத் தன்மையையும் பாழ்படுத்திவிட்டார். இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு மாரடைப்பு வந்துவிட்டது. தீவிரவாதத்திற்குத் தரை வழியை அளித்த இவரா காவலாளி, ஜெயப்பிரதாவுக்கு வேண்டுமானால் இவர் நல்லவராக இருக்கலாம். ஆனால், கடைக்கோடியில் உள்ள ஒருவன், இந்த அரசை எட்டி உதைக்கத் தயாராகிவிட்டான். இந்தியத் தேர்தல் கமிஷன் மோடியின் பாக்கெட்டில் இருக்கிறது.

தேர்தல் 2019

மோடியின் ஆட்சியை எந்த தரப்பு மக்களும் விரும்பவில்லை. அவர் அரசை வீழ்த்துவதற்கு அனைத்து தரப்பு மக்களும் தயாராகிவிட்டனர்.  ஆளும் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளை கிரண் பேடி தொடர்ந்து முடக்கிவருகிறார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழகத்தில் இரண்டாவது இடத்தையும், எடப்பாடியின் அ.தி.மு.க மூன்றாவது இடத்தையும் பெறும்” என்றவரிடம், தி.மு.க-விற்காக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “நான் மட்டும்தான் கொள்கையுள்ள அரசியல்வாதி. 32 ஆண்டுகளாக ஒரே கொள்கையைப் பேசிவருகிறேன். இடம் மாறினாலும், தடம் மாறாமல் பயணிக்கின்ற ஒரே நபர் நான்” என்றார்.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க