கடலில் மிதந்த பிரமோஸ் ஏவுகணையின் உதிரி பாகம்!- மீட்டுவந்த ராமநாதபுரம் மீனவர்கள் | Spare part of the Brahmos missile in the sea near Ramanathapuram

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (27/03/2019)

கடைசி தொடர்பு:16:40 (27/03/2019)

கடலில் மிதந்த பிரமோஸ் ஏவுகணையின் உதிரி பாகம்!- மீட்டுவந்த ராமநாதபுரம் மீனவர்கள்

ராமநாதபுரம் அருகே உள்ள தினைக்குளம் கடலில் மிதந்த பிரமோஸ் ஏவுகணை உதிரி பாகத்தை மீட்ட மீனவர்கள் புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் அருகே கடலில் மிதந்த பிரமோஸ் ஏவுகணை உதிரிப்பாகம்
 

ராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் இன்று காலை கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது கடல் பகுதியில் மர்மப் பொருள் ஒன்று மிதந்து வருவதைக் கண்டனர். இதையடுத்து, அதைக் கயிற்றில் கட்டி தங்கள் படகு மூலம் தினைக்குளம் கிராம கரைப்பகுதிக்குக் கொண்டு வந்தனர். பின்னர் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீஸார் கரைக்குக் கொண்டு வந்த அந்த மர்மப் பொருளை ஆய்வு செய்ததில் அது பாதுகாப்பு தொடர்பான பொருள் எனத் தெரியவந்தது.

இதையடுத்து, புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு இது பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நடத்திய ஆய்வில் கடலில் மிதந்து வந்த பொருள் பிரமோஸ் ஏவுகணையின் உதிரி பாகம் எனவும், ஏவுகணையில் எரிபொருள் நிரப்புவதற்கு  இந்தப் பாகம் பயன்படுத்தப்படுவது என்பதும் தெரியவந்தது. ஏவுகணை சோதனையின்போது வானில் இருந்து கடலில் விழுந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், இதுகுறித்து புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.