``நான் கற்ற பரம்பரை; குற்றப் பரம்பரை அல்ல’’- தமிழிசை பன்ச் ட்வீட் | Tamilisai twitter post regarding election petition

வெளியிடப்பட்ட நேரம்: 16:29 (27/03/2019)

கடைசி தொடர்பு:09:37 (28/03/2019)

``நான் கற்ற பரம்பரை; குற்றப் பரம்பரை அல்ல’’- தமிழிசை பன்ச் ட்வீட்

பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை மற்றும் தி.மு.க மகளிர் அணித் தலைவி கனிமொழி ஆகியோர் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில்  போட்டியிடுகின்றனர். தமிழக அரசியல் களத்தில் துடிப்புடன் செயல்படும் இரண்டு பெண் ஆளுமைகளும் ஒரே தொகுதியில் போட்டியிடுவதால், தூத்துக்குடியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கனிமொழி, தமிழிசை இருவரும் நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

தமிழிசை

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. தூத்துக்குடி தொகுதியின் தேர்தல் அதிகாரி முன்னிலையில் வேட்புமனு பரிசீலனை நடந்தது. அப்போது, பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை மற்றும்  தி.மு.க வேட்பாளர்கள் கனிமொழி ஆகிய இருவரின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.  கனிமொழி பி-2 படிவத்தை நிரப்பாத காரணத்தால் அவரது வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளது, கணவரின் வருமானம், குற்ற வழக்குகள்  உள்ளிட்டவை குறித்து வேட்பு மனுவில் குறிப்பிடாததால் தமிழிசை மனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து தமிழிசை ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழிசை

சொல்ல வரும் கருத்தை பன்ச் டயலாக்காக சொல்வது தமிழிசையின் தனிச்சிறப்பு. இந்த விவகாரத்திலும் ஒரு பன்ச் பதிவிட்டிருக்கிறார், ``குற்ற வழக்கு இல்லை நான் கற்ற பரம்பரை. குற்றப் பரம்பரை அல்ல.கணவரும் அவ்வாறே. வீண் வதந்தி? தோல்வி பயம்???’’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். 

`குற்றப் பரம்பரை' பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் தமிழிசை இவ்வாறு பேசி வருகிறாரா என சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க