`சொல்வதைச் செய்பவர், செய்வதைச் சொல்பவர் பிரதமர் மோடி!” -மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் | piyush goyal speech in kumari meeting

வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:15 (29/03/2019)

`சொல்வதைச் செய்பவர், செய்வதைச் சொல்பவர் பிரதமர் மோடி!” -மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

``சொல்வதைச் செய்பவர், சொய்வதைச் சொல்பவர் பிரதமர் மோடி. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஆண்ட சில குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், வறுமையைப் போக்க எதுவும் செய்யவில்லை. காங்கிரஸ், தி.மு.க. தலைவர்கள் ஊழலுக்கு மேல் ஊழலில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள்” என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார்.

பியூஷ் கோயல்

நாகர்கோவிலில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டு பேசுகையில், ``பிரதமர் நரேந்திரமோடி, தங்கத்தைப் போன்றவரை உங்களுக்குத் தந்திருப்பதால், நான் பெருமைபடுகிறேன். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகச் சிறந்த வெற்றிக் கூட்டணியைத் தந்திருக்கிறது. மக்கள் பணி செய்யும் வேட்பாளர்களை நாங்கள் களமிறக்கியுள்ளோம். தன் நாடி நரம்பெல்லாம் சேவை என்பதைக் கொண்டுள்ள பொன்.ராதாகிருஷ்ணன், சிறந்த வேட்பாளர். விவேகானந்தர் போன்று நரேந்திர மோடியும் தன் வாழ்க்கையை நாட்டிற்காக அர்ப்பணித்துள்ளார். அனைத்து மக்களும் வீடு உள்ளவர்களாக, கழிவறை, சுத்தமான குடிநீர், மின்சார இணைப்பு, சாலை வசதி என சகல வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கி நாட்டை கட்டமைத்துக்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.

பியூஸ்கோயல்

தாய்மார்களின் மேன்மையைக் காக்க 10 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 80 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு குறைந்தவிலை உணவுப்பொருள் வழங்கப்படுகிறது. மோடியின் முயற்சியால், உலகிலேயே சக்தி மிகுந்த நாடாக இந்தியா வளர்கிறது. சொல்வதைச் செய்பவர், செய்வதைச் சொல்பவர் பிரதமர் மோடி. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை ஆண்ட சில குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், வறுமையைப் போக்க எதுவும் செய்யவில்லை. காங்கிரஸ், தி.மு.க. தலைவர்கள் ஊழலுக்கு மேல் ஊழலில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடி பணத்தை நிலக்கரி ஊழலால் இழந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலால் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயை நாடு இழந்துள்ளது. பா.ஜ.க-வின் பொன்.ராதாகிருஷ்ணன், நாற்பதாயிரம் ரூபாய்க்கு அதிகமான திட்டம் கொண்டுவந்துள்ளார். எதிரணியில் காங்கிரஸ், தி.மு.க செய்த ஊழல்தான் நினைவிற்குவருகிறது.

பா.ஜ.க.

நீதிமன்றத்தில் வாய்தாவிற்குமேல் வாய்தா வாங்கி தண்டனை கிடைக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள். ஊழல் செய்யும் காங்கிரஸ், தி.மு.க-விற்கு தண்டனை பெற்றுதர மேல்முறையீடு செய்துள்ளோம். மீனவர்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் பொன்.ராதாகிருஷ்ணன் அயராது செயல்பட்டிருக்கிறார். மீனவர்களுக்கான துறையைக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளோம். விவசாய அட்டைபோன்று மீனவர்களுக்கும் அட்டை கொடுக்கப்படும். மீனவர்களுக்குப் புதிய வங்கிக்கடன் கொண்டுவந்துள்ளோம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டுவந்துள்ளோம்" என்றார்.