`ரூ.3 கோடி சொத்தை மறைத்துவிட்டார், வேட்பு மனுவை ரத்து செய்யுங்கள்!'- ஓ.பி.எஸ் மகன்மீது தேர்தல்ஆணையத்தில் புகார் | wrong information filed in nomination of ops son affidavit

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:21 (29/03/2019)

`ரூ.3 கோடி சொத்தை மறைத்துவிட்டார், வேட்பு மனுவை ரத்து செய்யுங்கள்!'- ஓ.பி.எஸ் மகன்மீது தேர்தல்ஆணையத்தில் புகார்

ரவீந்திரநாத் குமார்  - தேர்தல்

டைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பாக தேனி தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திர நாத் குமார் தனது வேட்பு மனுவில் தவறான சொத்து விவரங்களைப் பதிவிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.

 

அறப்போர் இயக்கம் புகார்

இது குறித்து பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், ``தேனி தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திநாத் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில், தவறான சொத்து மதிப்பை பதிவிட்டுள்ளார். நான்கு கோடியே 16 லட்சத்து 27 ஆயிரத்து 224 ரூபாய் என்று எழுதியுள்ள விவரத்துக்கான அட்டவணைப்  பட்டியலில் ஒரு கோடியே 35 லட்சத்து 30 ஆயிரத்து 394 ரூபாய் வரை மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளது. எஞ்சிய மூன்று கோடிக்கான கணக்கு பட்டியல் எங்கே? அதுவும் இந்த ஒரு கோடி ரூபாய் விவசாயத்தில் இருந்து வந்த வருமானமாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதுதான் வேடிக்கையாக உள்ளது. மேலும், இதுகுறித்து  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பால் தேவ் ஆகியோருக்குப்  புகார் மனுவை அனுப்பியுள்ளோம். உடனடியாக இந்த மனு மீதான விசாரணை நடத்தி ரவீந்திரநாத் குமாரின் வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று" கூறியுள்ளார்.