`மூக்கில் துணி, கழுத்தில் கயிறு!'- அதிர்ச்சியளிக்கும் துடியலூர் சிறுமியின் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட் | postmortem report of coimbatore child reveals shocking details about murder

வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (28/03/2019)

கடைசி தொடர்பு:16:31 (28/03/2019)

`மூக்கில் துணி, கழுத்தில் கயிறு!'- அதிர்ச்சியளிக்கும் துடியலூர் சிறுமியின் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்

கோவை சிறுமி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது பிரேதப் பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

கோவை சிறுமி

கோவை துடியலூர் சிறுமி, கடந்த திங்கள் கிழமை தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். இதையடுத்து, அவரின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, பெற்றோரும், போலீஸாரும் விடிய விடியச் சிறுமியைத் தேடினர். ஆனால், அடுத்த நாள் காலை ரத்தக் காயங்களுடன் வீட்டின் அருகே சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தனிப்படை போலீஸ் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக, சிறுமியின் பெற்றோர் சந்தேகம் இருப்பதாகச் சொன்னவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த மூன்று மாதங்களாகச் சிறுமியின் பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வருவதும் தற்போது தெரியவந்துள்ளது. தற்போது பாலியல் கொலை செய்யப்பட்ட சிறுமியும், அவரின் தங்கையும் தாயுடன் வாழ்ந்து வந்தனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட பிறகுதான், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, சிறுமியை வன்கொடுமை செய்வதற்காக, அவரது வாயையும், மூக்கையும் துணியால் வைத்து அழுத்தியும், கழுத்தில் கயிறு போல ஒரு பொருளை வைத்து இறுக்கி பாலியல் வன்கொடுமை செய்ததும் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும், சிறுமியின் ஆசன வாயைப் பரிசோதனை செய்ததில், சிறுமி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டதும், அவரது பிறப்புறுப்பை பரிசோதனை செய்ததில், அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.