`யாருக்கு வாக்களித்தோம்ன்னு உறுதியளிக்கணும்!'- 2,866 அலுவலர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி | EC trains election officers over VVPT verification

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (28/03/2019)

கடைசி தொடர்பு:18:30 (28/03/2019)

`யாருக்கு வாக்களித்தோம்ன்னு உறுதியளிக்கணும்!'- 2,866 அலுவலர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி

யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரத்தைக் கையாள்வது குறித்த பயிற்சியில் 2,866 வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 அரியலூர் மாவட்ட ஆட்சியருமான விஜயலட்சுமி பார்வையிடுகிறார்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மைய அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குப்பதிவை உறுதிசெய்யும் இயந்திரம் பயன்படுத்துவது குறித்த பயிற்சி அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இப்பயிற்சியை மாவட்ட தேர்தல் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான விஜயலட்சுமி பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

 அரியலூர் மாவட்ட ஆட்சியருமான விஜயலட்சுமி

நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்ற உள்ள மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்திலுள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குப்பதிவை உறுதிசெய்யும் இயந்திரம் பயன்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. முதல் முறையாக தற்போது நடைபெற உள்ள பொதுத்தேர்தலில்தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி

அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 297 வாக்குப்பதிவு மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள 1445 நபர்கள், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 292 வாக்குப்பதிவு மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள 1421 நபர்கள் என மொத்தம் 2866 நபர்களுக்கு அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கு அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.