`பொன்.மாணிக்கவேல் விளம்பரத்துக்காக கைது செய்கிறார்!' - சென்னை உயர் நீதிமன்றம் | madras hc slams pon.manikkavel

வெளியிடப்பட்ட நேரம்: 19:46 (28/03/2019)

கடைசி தொடர்பு:21:06 (28/03/2019)

`பொன்.மாணிக்கவேல் விளம்பரத்துக்காக கைது செய்கிறார்!' - சென்னை உயர் நீதிமன்றம்

பொன்.மாணிக்கவேல் முறையான விசாரணை மேற்கொள்ளாமல் விளம்பரத்துக்காக கைது செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு மூலம் 8.77 கிலோ தங்கம் அபகரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக, தலைமை ஸ்தபதியாக இருந்த முத்தையா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணியும் கைது செய்யப்பட்டார்.  இதையடுத்து, தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி வீரசண்முகமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

பொன் மாணிக்கவேல்

வழக்கை  விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வீரசண்முகமணிக்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். முன் ஜாமீன் வழங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார். நீதிபதி தனது உத்தரவில், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ ஏ எஸ் அதிகாரியை எந்தக் காரணமும் தெரிவிக்காமல் கைது செய்ததை விளம்பரத்துக்காக என்றுதான் கருத முடியும் எனவும் சிலைக்கடத்தல் பிரிவு பழிவாங்கும் நோக்கத்துடன் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது எனவும் கண்டனம் தெரிவித்தார். இனியாவது சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு பழிவாங்கும் போக்குடன், ஒருதலைபட்சமாக செயல்படாது என நம்புவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.