`திருடுவதை நிறுத்தினாலே இரண்டு தமிழ்நாட்டை நடத்தலாம்!’ - பிரசாரத்தில் தகித்த கமல் | kamal election campaign in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:39 (30/03/2019)

`திருடுவதை நிறுத்தினாலே இரண்டு தமிழ்நாட்டை நடத்தலாம்!’ - பிரசாரத்தில் தகித்த கமல்

`ஆட்சியாளர்கள் தற்போது திருடிக்கொண்டிருக்கும் பணத்தை திருடுவதை நிறுத்தினாலே இரண்டு தமிழ்நாட்டை நடத்தலாம்'' என்று கமல் பிரசாரத்தில் பேசியுள்ளார்.

கமல்

தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் ரங்கராஜனை ஆதரித்து கமல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் , ``எம் மக்களை அவர்கள் தொழில் செய்யும் இடத்திலிருந்து மாற்றி செம்மஞ்சேரியில் குடியமர்த்தியுள்ளனர். ஒழுகும் கூரைக்கு அடியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எழில் நகரம் என்ற பெயர் வைத்தாலும், எழில் கொஞ்சமும் இல்லாமல் மூன்றே வருடத்தில் கூரை ஒழுக ஆரம்பித்துவிட்டது என்பதுதான் உண்மை. மக்களிடமிருந்து கேட்டறிந்த உண்மை இது. ரங்கராஜன் கலெக்டராக இருந்து, வேலையைத் துறந்து மக்கள் பணிக்காக வந்துள்ளார். இதுபோன்ற ஒருவர் உங்களுக்குக் கிடைத்தால், உங்கள் வாழ்வை மாற்றமுடியும். ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் தருவோம். அது எங்கள் கடமை.

கமல்

எங்களால் செய்ய முடியாது என்று அவர்கள் எப்படிச் சொல்லலாம். 3 வருடத்துக்குள் அனைத்து வீட்டுக்கும் தண்ணீர் கொண்டுவர எங்களால் முடியும். இந்த நீர்நிலைகளை பராமரித்தால், அதன் மூலம் பலருக்கு வேலை கிடைக்கும். இப்போது திருடிக்கொண்டிருக்கும் பணத்தை திருடுவதை நிறுத்தினாலே இரண்டு தமிழ்நாட்டை நடத்தலாம். திட்டங்களை வகுத்துக் கொடுக்க அறிவார்ந்த தமிழர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவரை யாரும் அணுகவில்லை. தொழில் முனைவர்கள் இங்கே வரும்போது எவ்வளவு கமிஷன் என்றுதான் கேட்டார்கள். மக்கள் நீதி மய்யம் அப்படியிருக்காது. செய்வோம் என்று பலரும் உங்களை ஏமாற்றியுள்ளார்கள். எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள் செய்து காட்டுகிறோம். வாய்க்கால்கள் தூர்வாரப்படும், புதிய குளங்கள் வெட்டப்படும். தமிழனுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது குறைவு, தெரிந்த விஷயங்கள் நிறைய; அதை நாம் பயன்படுத்தத் தவறிவிட்டோம்'' என்றார்.