`கலைஞரின் பேரனாக, ஸ்டாலினின் மகனாகக் கேட்கிறேன்..!’ - பிரசாரத்தில் நெகிழ்ந்த உதயநிதி | udhyanithi stalin emotional speech in komarapalayam election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:40 (30/03/2019)

`கலைஞரின் பேரனாக, ஸ்டாலினின் மகனாகக் கேட்கிறேன்..!’ - பிரசாரத்தில் நெகிழ்ந்த உதயநிதி

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க கட்சியின் ஈரோடு தொகுதி வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து, குமாரபாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஓட்டு சேகரித்தார்.

உதயநிதி

அப்போது பேசிய அவர், ``இப்போது வீசிக்கொண்டிருப்பது மோடி எதிர்ப்பலை மட்டுமல்ல நமது தலைவர் ஸ்டாலினின் ஆதரவலை" என்று கூற கூட்டம் ஆர்ப்பரித்தது. தொடர்ந்து பேசிய உதயநிதி, ``இந்தத் தொகுதியின் அமைச்சர் தங்கமணி பொதுமக்கள் யாரையுமே கண்டுகொள்வதில்லை. கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் ஆகிய இந்த மூன்று மட்டுமே அ.தி.மு.க-வின் தாரக மந்திரம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விசைத்தறிக்கு இலவச மின்சாரம், நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, விவசாயக் கடன் தள்ளுபடி ஆகியவற்றை நிறைவேற்றுவோம்.

தலைவர் கலைஞர் சொல்வதுபோல சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம். ராகுல் பிரதமராக வர வேண்டும். மோடியை அனுப்பும் நாள் ஏப்ரல் 18, அதை மறந்துவிடாதீர்கள். ஒரு நாள் தூக்கத்திலிருந்து எழுந்து திடீரென, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். வங்கி வாசலில் நின்றதில், ஏராளமானோர் பலியாகினர். தி.மு.க., தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன். நமது இந்திய பிரதமர் மோடிக்கு இரண்டு கைக்கூலிகள் இருக்குறாங்க. அதுவேறு யாரும் இல்ல, எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும்தான்.

உதயநிதி

முதல்வர் எடப்பாடி பழனிசாமிகிட்ட நீங்க என்ன சாதனை செஞ்சீங்கன்னு கேட்டா, இரண்டு ஆண்டு ஆட்சியில நிக்குறதே சாதனைதான்னு சொல்றாங்க. இவங்களுக்கா உங்கள் ஓட்டு. தலைவர் கலைஞருடைய பேரனாக, தளபதி ஸ்டாலினோட மகனாகவும் கேட்கிறேன் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள்" என்று கூற மொத்தக் கூட்டமும் ஆரவாரமாக கைத்தட்டினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க