டி-ஷர்ட்டில் அழகிரி படம்! - மதுரை வாலிபருடன் செல்ஃபி எடுத்த மு.க.ஸ்டாலின் | azhagiri follower meet the stalin, viral picture

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (29/03/2019)

கடைசி தொடர்பு:10:42 (30/03/2019)

டி-ஷர்ட்டில் அழகிரி படம்! - மதுரை வாலிபருடன் செல்ஃபி எடுத்த மு.க.ஸ்டாலின்

மதுரையில் வாக்கிங் சென்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடன், அழகிரி படம் போட்ட டி-ஷர்ட் அணிந்த இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலின்  பிரசாரம்

தி.மு.க கூட்டணியின் மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு பிரசாரம் செய்ய நேற்று மதுரை வந்த மு.க.ஸ்டாலின், தென் மாவட்டங்களில்  பிரசாரம் செய்யும் வகையில் மதுரையில் தங்கியுள்ளார். இன்று காலை, வேட்பாளர் சு.வெங்கடேசனுடன்  மாட்டுத்தாவணி பகுதியில் வாக்கிங் சென்றார். மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் பகுதியில்  சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக அங்கிருந்த பொதுமக்கள், வியாபாரிகளிடம்  வாக்குகள் கேட்டார்.

செல்ஃபி எடுத்துக்கொண்ட ஸ்டானின்

அதிகாலையில் மு.க.ஸ்டாலினை எதிர்பார்க்காத மக்கள் ஆச்சர்யப்பட்டனர். பலர் அவருடன் படம் எடுத்துக்கொண்டனர். அப்போது அங்கு வேலைசெய்யும் மு.க.அழகிரியின் படம் அச்சிட்ட டி-ஷர்ட் அணிந்திருந்த இளைஞர் ஒருவர், மு.க.ஸ்டாலின் அருகில் வந்தார். அவருடன் ஸ்டாலின் நெருங்கி நின்றவுடன், செல்ஃபி எடுத்துக்கொண்டார். இது, அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அழகிரி ஆதரவாளரே ஸ்டாலினை விரும்புகிறார் என்று தி.மு.க-வினர் சமூக ஊடகங்களில் மகிழ்ச்சியுடன் தகவலைப் பரப்பிவருகிறார்கள். மதுரை தி.மு.க-வினருக்கு இன்று உற்சாகமான நாளாக மாறியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க