ஆதரவு கொடுக்காத ரஜினி மக்கள் மன்றம்! - ஏ.சி.சண்முகம் அப்செட் | ac shanmugam upset over not getting Rajini makkal mandram's support

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (29/03/2019)

கடைசி தொடர்பு:11:01 (30/03/2019)

ஆதரவு கொடுக்காத ரஜினி மக்கள் மன்றம்! - ஏ.சி.சண்முகம் அப்செட்

அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உட்பட வேறு எந்தக் கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு தரப்போவதில்லை என்று வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது.

அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க வேட்பாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரண்டு வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மகன் கதிர்ஆனந்தை வெற்றிபெறச் செய்ய துரைமுருகன் தேர்தல் களத்தில் வேகமெடுத்திருப்பதால், ஏ.சி.சண்முகம் சற்று தடுமாற்றத்தில் இருக்கிறார். கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் போதிய அளவு ஒத்துழைப்பு தருவதில்லை என்று ஏ.சி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் புலம்புகின்றனர். 

இந்த நிலையில், ஒன்றரை லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம், ‘‘ஏ.சி.சண்முகம் உட்பட வேறு எந்தக் கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு தரப்போவதில்லை’’ என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ரஜினியின் நண்பர் என்பதால் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவான நிலைப்பாடு இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட நிலையில், ரஜினி மக்கள் மன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தை நடத்தியும், மன்ற நிர்வாகிகள் பிடிகொடுக்காததால், ஏ.சி.சண்முகம் அப்செட்டில் இருக்கிறார்.


அதிகம் படித்தவை