நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனுக்கு குக்கர் சின்னம்! | EC allots cooker symbol to pasumpon pandyan in Madurai constituency

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (29/03/2019)

கடைசி தொடர்பு:11:01 (30/03/2019)

நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனுக்கு குக்கர் சின்னம்!

மதுரை மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் `அண்ணா திராவிடர் மக்கள் முன்னேற்ற கழகத்' தலைவரான வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் பேராசிரியை நிர்மலாதேவிக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பசும்பொன் பாண்டியன்


வேட்பாளர் பட்டியலையும், அவர்களுக்கான சின்னத்தையும் இன்று உறுதிப்படுத்திய தேர்தல் ஆணையம், தமிழகம் முழுவதும் போட்டியிடும் பல்வேறு சுயேச்சைகளுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதைப் பார்த்து, `விரும்பிக் கேட்ட எங்களுக்கு சின்னத்தை ஒதுக்காமல், கேட்காதவர்களுக்கு கொடுத்துள்ளனர்' என்று அ.ம.மு.க-வினர் புலம்புகிறார்கள். 

இந்த நிலையில், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பசும்பொன் பாண்டியன் மதுரை மாவட்ட அ.தி.மு.க-வில் இருந்தபோது அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு எதிராக செயல்பட்டு பல்வேறு வழக்குகளைச் சந்தித்தவர். ஜெ. தீபா தனியாக அமைப்பு தொடங்கியபோது அவருடன் இருந்து சட்ட ஆலோசனை வழங்கினார். அதன்பின் கருத்து வேறுபாட்டால் வெளியேறி அண்ணா திராவிடர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில், நிர்மலாதேவி வழக்கில் இவர் ஆஜராகத் தொடங்கிய பின்புதான் அந்த வழக்கிலுள்ள பல மர்மங்கள் வெளிப்படத் தொடங்கியது. சமீபத்தில் அவருக்கு ஜாமீனும் கிடைத்தது. அதிலிருந்து பரபரப்பான நபராக மாறிவிட்டார் பசும்பொன் பாண்டியன். இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க