கரூரில் பறக்கும்படையினரிடம் சிக்கிய 30 லட்சம் - உரிய ஆவணங்கள் இருந்ததால் ஒப்படைப்பு | Election officers handed over 30 Lakhs to the relevant persons in Karur

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (31/03/2019)

கடைசி தொடர்பு:09:40 (31/03/2019)

கரூரில் பறக்கும்படையினரிடம் சிக்கிய 30 லட்சம் - உரிய ஆவணங்கள் இருந்ததால் ஒப்படைப்பு

கரூர் மற்றும் குளித்தலையில் உரிய ஆணவங்கள் இன்றி கொண்டுச்செல்லப்பட்ட ரூ.1,85,500 ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல், உரிய ஆவணங்களை காட்டியதால், பறிமுதல் செய்யப்பட்ட 30,31,488 ரூபாய் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
 

பணம் ஒப்படைப்பு


 மக்களவை பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000க்கு மேல் பணம் கொண்டு செல்லக்கூடாது என்றும், அவ்வாறு கொண்டு செல்பவர்கள் அதற்கான உரிய ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பறக்கும் படையினரும், நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுவினரும், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனடிப்படையில், கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொளந்தக்கவுண்டனூர் அம்பேத்கர் நகரில் நிலமெடுப்பு சிறப்பு தனிவட்டாட்சியர் திருமதி. அமுதா தலைமையிலான பறக்கும் படை குழுவினர், இன்று(30.03.2019) வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மாருதி ஆல்டோ வாகனத்தில் சென்ற ராஜா(32) என்பவர் உரிய ஆவணம் இன்றி வைத்திருந்த ரூ.92,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, கரூர் வட்டாட்சியர் பிரபுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

தேர்தல் பறக்கும்படை

 

மேலும்  , குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராபுரம் ஒன்றியத்தில் உள்ள இலாலாபேட்டை பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் இராஜேந்திரன், காவல் சிறப்பு சார்ஆய்வாளர் மணிசேகரன் ஆகியோர் அடங்கிய பறக்கும்படை(2) குழுவினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  சாதிக்(35) என்பவர் ஓட்டிச்சென்ற காரில் சோதனை செய்தபோது, உரிய ஆவணம் இன்றி அவர் வைத்திருந்த ரூ.93,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, குளித்தலை சட்டமன்றத்தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், குளித்தலை வருவாய்க் கோட்டாட்சியருமான எம்.லியாகத் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளின்போது, வட்டாட்சியர் அன்பழகன், குளித்தலை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முருகன், குளித்தலை வட்டாட்சியர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். பறக்கும்படை மற்றும் நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுவினரால், இதுவரை
(நேற்று பிடிபட்ட தொகையும் சேர்த்து) ரூ.35,70,338 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ரூ.30,31,488 ரொக்கம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.