‘வாய் சிவக்க வெற்றிலை; உங்கள் வாழ்க்கை சிறக்க இரட்டைஇலை’- தேர்தல் பிரசாரத்தில் ரவீந்திரநாத் | Theni Constituency ADMK Candidate Ravindranath Election Campaign

வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (31/03/2019)

கடைசி தொடர்பு:09:46 (01/04/2019)

‘வாய் சிவக்க வெற்றிலை; உங்கள் வாழ்க்கை சிறக்க இரட்டைஇலை’- தேர்தல் பிரசாரத்தில் ரவீந்திரநாத்

வாய் சிவக்க தான் வெற்றிலை உங்கள் வாழ்க்கை சிறப்படைய இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்  என துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மகன் ரவீந்திரநாத் மக்களிடம் பிரசாரம் செய்தார்.

ஓபிஎஸ்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்றியுள்ள பகுதிகள் தேனி பாராளுமன்ற தொகுதியில் இணைகிறது. இந்நிலையில் தேனி பாராளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க., வேட்பாளராக துணை முதல்வர் மகன் ரவீந்திரநாத் தேர்வு செய்யப்பட்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்துவருகிறார். இந்நிலையில் உசிலம்பட்டி அடுத்த செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட வடுகபட்டி, திடியன் விலக்கு, இராமநாதபுரம், கட்டத்தேவன்பட்டி, கள்ளபட்டி தும்மக்குண்டு உள்ளிட்ட பகுதியில் ரவீந்திரநாத் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கிராம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரசாரத்தின் போது இரவீந்திரன் மக்களிடம் பேசுகையில், " தேனி பாராளுமன்றத்தில் தி.மு.க., ஆதரவு வேட்பாளர் வெளியூர்காரர். இன்னும் சில வேட்பாளர்கள் இரட்டை இலையை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தேர்தலில் நிற்கின்றனர் மற்றபடி அவர்களுக்கு சமூக அக்கறை இல்லை. நான் அவ்வாறு இல்லை உங்கள் வீட்டு பிள்ளை உங்களுக்காக உழைக்க காத்திருக்கின்றேன். எனவே நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் ஆரத்தியில் உள்ள வெற்றிலை வாய் சிவக்கும். ஆனால் உங்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்றால் இரட்டை இலை தேர்ந்தெடுங்கள் என மக்களிடையே பேசி வாக்கு சேகரித்தார்.