கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கு - ஆறு நாட்களுக்குப் பிறகு ஒருவர் கைது! | one arrested in Coimbatore child murder case

வெளியிடப்பட்ட நேரம்: 10:54 (31/03/2019)

கடைசி தொடர்பு:12:02 (31/03/2019)

கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கு - ஆறு நாட்களுக்குப் பிறகு ஒருவர் கைது!

கோவை சிறுமி  பாலியல் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தோஷ்

கோவை துடியலூர் அருகே, கடந்த திங்கள் கிழமை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். சிறுமியின் பெற்றோர் சந்தேகப்பட்ட நான்கு பேர் உள்பட  50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாக, சிறுமியின் வீட்டுக்கு மிக அருகில் வசித்து வந்த விஜயக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கௌதம், சதீஸ், வசந்த், சந்தோஷ், துரைராஜ் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 

இதில், சந்தோஷ் என்பவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீஸார் கூறியுள்ளனர். சந்தோஷ்குமார் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். இவரது தாத்தாவின் வீடு, சிறுமியின் வீட்டுக்கு அருகில் இருக்கிறது. அங்கு அவர் அடிக்கடி வந்து செல்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஆறு நாள்களுக்குப் பிறகு இந்த வழக்கில் முதல் நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.