உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.28 கோடி தங்கம், வெள்ளி பறிமுதல்! | rs.2.28 crore gold and silver seized in virudhunagar

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (31/03/2019)

கடைசி தொடர்பு:15:00 (31/03/2019)

உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.28 கோடி தங்கம், வெள்ளி பறிமுதல்!

விருதுநகர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2.28 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை நள்ளிரவு பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர

மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, வாக்காளர்களுக்கு பணவிநியோகம் செய்வதை தடுப்பதற்காக ஆங்காங்கே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் சாய்பாபா கோயில் அருகே நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சிவகாசியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற வாகனத்தை சோதனையிட்டனர்.அதில் உரிய ஆவணங்களின்றி 3 கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. எனவே அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் அந்த பொருட்களை நள்ளிரவில் விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மதுரை அனுப்பானடியை சேர்ந்த ஹரிஹரன் (24), மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த நாகராஜன் (29), சிவகங்கை ராஜாஜி தெருவை சேர்ந்த பீட்டர் ஜோசப் (36) ஆகியோர் வாகனத்தில் சென்றதும், நகைக் கடைகளில் விற்பனை செய்வதற்காக இந்த நகைகளைக் கொண்டு சென்றதும் தெரியவந்தது.பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ.2,28,56,265. தேர்தல் அலுவலர்கள், காவல்துறையினர் நகைகளைக் கொண்டு சென்றவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.