`தி.மு.கவில் இப்போது பினாமி நிர்வாகிகள்தான் உள்ளனர்' - மு.க.அழகிரி குற்றச்சாட்டு! | Mk azhagiri talks about dmk's current situation

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (31/03/2019)

கடைசி தொடர்பு:09:49 (01/04/2019)

`தி.மு.கவில் இப்போது பினாமி நிர்வாகிகள்தான் உள்ளனர்' - மு.க.அழகிரி குற்றச்சாட்டு!

திமுகவில் நிர்வாகிகளை எங்கோ இருந்து சிலர் இயக்குகிறார்கள். உண்மையாக உழைப்பவர்கள் அங்கு இல்லை என்று மு.க.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வரும் நிலையில் மு.க.அழகிரியின் நிலைப்பாடு என்னவென்று  எல்லோரும் எதிர்பார்த்து கிடக்கிறார்கள். ஆனால், அவரோ  எந்த கருத்தும் கூறாமல் உள்ளார்.

மு.க.அழகிரி

இந்த நிலையில் இன்று மதுரையில் தன் தீவிர ஆதரவாளர் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் எம்.எல்.ராஜ் மகள் திருமணத்தை நடத்தி வைக்க மு.க.அழகிரி வருகை தந்தார். இந்த திருமண விழாவில் காந்தி அழகிரி, துரை தயாநிதி ஆகியோரும் கலந்து கொண்டனர். மணமக்களை வாழ்த்திவிட்டு மைக் பிடித்த மு.க.அழகிரி, "அனைவருக்கும் வணக்கம். அருமை தம்பி எம்.எல். ராஜின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்துவதில் என்னுடைய குடும்பம் மட்டுமல்ல, அனைவருக்கும் மகிழ்ச்சி. எம்.எல். ராஜை பற்றி பேசுவதென்றால் பல விஷயங்களை பேசலாம். தி.மு.கவில் அவர் எப்படியெல்லாம் உழைத்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் அப்போது பல பொறுப்புகளில் இருந்தார்.

ஆனால், தி.மு.க இப்போதெல்லாம் அப்படியல்ல. ஏதோ சம்பளத்துக்கு வேலை பாக்கிற மாதிரி நிர்வாகிகள் இருக்கிறார்கள். வெளியிலிருந்து யாரோ இவர்களை இயக்கும் வகையில் பினாமி நிர்வாகிகளாக உள்ளனர். உண்மையாக உழைக்கிறவர்கள் தி.மு.கவில் இல்லை." என்று பேசியவர், தேர்தல் சம்பந்தமாக எந்த கருத்தும் கூறாமல் கிளம்பி விட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க