`கண்ணதாசனின் சொந்த ஊரில் பிரசாரம் தொடக்கம்; புகார் பெட்டியுடன் வாக்கு சேகரிப்பு!’ - தேர்தல் களத்தில் சினேகன் | MNM sivaganga candidate Snehan begins election Campaign

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (31/03/2019)

கடைசி தொடர்பு:14:25 (01/04/2019)

`கண்ணதாசனின் சொந்த ஊரில் பிரசாரம் தொடக்கம்; புகார் பெட்டியுடன் வாக்கு சேகரிப்பு!’ - தேர்தல் களத்தில் சினேகன்

கவிஞர் கண்ணதாசனின் சொந்த ஊரான சிறுகூடல் பட்டியிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார் சிவகங்கை மக்களவைத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கவிஞர் சினேகன். அதோடு மக்களின் புகார்களைப் பெறுவதாக பிரசாரத்துக்குச் செல்லும் இடமெல்லாம் புகார் பெட்டியைச் எடுத்துச் செல்வது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

சிநேகன்

மக்களிடையே பேசிய சினேகன், ``சிவகங்கை மாவட்டம், பிள்ளையார் பட்டி அருகே அமைந்துள்ளது சிறுகூடல் பட்டி கிராமம், கவிஞர் கண்ணதாசன் பிறந்த ஊர் இது. மத்திய அமைச்சர், நிதியமைச்சர், எம்.எல்.ஏ எம்.பிக்கள் எவரும் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவில்லை.சிவகங்கை மண்ணுக்கு இருக்கும் சிறப்பு மறைக்கப்பட்டிருக்கிறது. பிழைப்புக்காக மண்ணை விட்டு ஏராளமான மக்கள் வெளியேறிவிட்டார்கள். இன்றைக்கு தண்ணீரை தனியாருக்கு தாரை வார்த்திருக்கிறார்கள்.

மக்கள்தான் வி.ஐ.பி-க்கள். மக்கள்தான் எங்கள் முதலாளிகள். நாங்கள் அவர்களுக்கு வேலை செய்ய வந்திருக்கிறோம். சிவகங்கை தொகுதி மிகவும் பின்தங்கி இருக்கிறது. கரும்பு, பழங்கள் என சோலைவனம்போல் இருந்த சிவகங்கை, பாலைவனம்போல் மாறிவிட்டது. இந்த மாவட்டம் இழந்த நீர் ஆதாரத்தையும், விவசாயத்தையும் மீட்டெடுக்க வேண்டும். அதேவேளையில் கிராம மக்களைத் தேடும்நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த மாவட்டத்தில் 61 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றிருக்கிறார்கள். ஆனால் அதற்கேற்றவாறு இங்கே வேலை வாய்ப்புகள் இல்லை’’ என்றார். மக்கள் நீதிமய்யத்தைச் சேர்ந்தவர்கள் வாக்கு கேட்கும்போது மக்களின் கோரிக்கைகளையும், புகார்களையும் பெறுவதற்காக கோரிக்கை பெட்டியை தங்களுடன் கொண்டு செல்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க