முன்னாள் ஆளுநர் இப்போது வேட்பாளர், கையிருப்போ ரூ.513! இப்படியும் ஒரு பா.ஜ.க வேட்பாளர் | former mizoram governor turns bjp candidate in kerala

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (01/04/2019)

கடைசி தொடர்பு:14:29 (01/04/2019)

முன்னாள் ஆளுநர் இப்போது வேட்பாளர், கையிருப்போ ரூ.513! இப்படியும் ஒரு பா.ஜ.க வேட்பாளர்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக குமணம் ராஜசேகரன் போட்டியிடுகிறார். இவரை, எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் சசி தரூர் களத்தில் நிற்கிறார். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் திவாகரன் களம் காண்கிறார். குமணம் ராஜசேகரன் கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர்.  ஒரு வருடத்துக்கு முன் மிஸோரம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

பாஜக குமணம் ராஜசேகரன்

தற்போது, தேர்தலில் போட்டியிடுவதற்காக மிஸோரம் மாநில ஆளுநர் பதவியை குமணம் ராஜசேகரன் ராஜினாமா செய்துள்ளார். வேட்புமனுத் தாக்குதலின்போது, கையிருப்பாக ரூ.513 மட்டுமே இருப்பதாக அவர்  குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால், ஆளுநராக இருந்தபோது வாங்கிய சம்பளம் என்னவாச்சு என்ற கேள்வி எழுகிறது அல்லவா? ஆம்.. மிஸோரம்  ஆளுநராக இருந்தபோது குமணம் ராஜசேகரனுக்கு ரூ.31.83  லட்சம் சம்பளமாக கிடைத்தது. இந்தச் சம்பளப் பணம் முழுவதையும் பல்வேறு ஆதரவற்ற குழந்தைகளின் இல்லத்துக்கு அவர் வழங்கியுள்ளார். வங்கியில் ரூ.1,05,232. இருப்பதாக குமணம் ராஜசேகரன் குறிப்பிட்டுள்ளார். இதுவும், பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் குமணம் ராஜசேகரன் பிரசார செலவுக்காக அவரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்த தொகை என்பது தெரியவந்துள்ளது. 

பாஜக வேட்பாளர் குமணம் ராஜசேகரன்

பரம்பரை சொத்தாக ரூ.10 லட்சம் மதிப்புள்ள 10 சென்ட் நிலம் உள்ளது. தொழில் என்ற இடத்தில் தன்னை சமூக ஆர்வலராக குமணம் ராஜசேகரன் குறிப்பிட்டுள்ளார். குமணம் ராஜசேகரன் மனுத்தாக்குதலுக்கான டெபாசிட் தொகையை பாலசுப்ரமணியம் என்பவர் செலுத்தியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க