சோதனையின்போது சிக்கிய பணம், பொருள்களில் தமிழகம் முதலிடம் - தேர்தல் ஆணையர் | Tamilnadu is no1 for the value of Money and jewels seized by election commission

வெளியிடப்பட்ட நேரம்: 13:23 (01/04/2019)

கடைசி தொடர்பு:11:01 (02/04/2019)

சோதனையின்போது சிக்கிய பணம், பொருள்களில் தமிழகம் முதலிடம் - தேர்தல் ஆணையர்

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பறக்கும் படையினர் நாடெங்கும் சோதனைகள் நடத்தி வருகின்றனர். உரிய ஆவணங்கள் அல்லது ரசீது இல்லாமல் வாகனத்தில் கொண்டு செல்லப்படும் பணம், நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு இந்திய அளவில் செய்துவரும் இந்தச் சோதனையில் இதுவரை சிக்கிய பணம் மற்றும் நகைகளின் மதிப்பீட்டை வைத்துப் பார்த்தால் தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறதென்று தமிழக தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாகு தெரிவித்திருக்கிறார். 

சத்யபிரதா சாஹூ

71 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கப்பணம். 88 கோடி ரூபாய் மதிப்புள்ள  தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், இதில் தங்கம் 313 கிலோவும் வெள்ளி 370 கிலோவும் அடக்கம். இது தவிர, 22 லட்ச ரூபாய் மதிப்புள்ள போதை குட்கா பொருள்களும் தமிழகத்தில் கைப்பற்றியிருப்பதாக சத்திய பிரதா சாகு குறிப்பிட்டிருக்கிறார்.

ஓட்டுக்குப் பணம் என்பதை கடந்த சில தேர்தல்களில் கட்சிகள் மக்களுக்குப் பழக்கப்படுத்தி வைத்திருக்கின்றன. அந்தப் பழக்கத்தை இந்த தேர்தலிலும் நடைமுறைப்படுத்துவார்கள் எனில் பணம் இன்னும் பல கோடிகள் சிக்கும் எனச் சந்தேகமின்றிச் சொல்லலாம்.