‘5 ஆண்டுகள் போதவில்லை; பா.ஜ.க-வுக்கு மீண்டும் வாய்ப்பளியுங்கள்’- இல.கணேசன் வேண்டுகோள் | BJP Leader Ela.Ganeshan Speaks about BJP'S Rule

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (01/04/2019)

கடைசி தொடர்பு:11:08 (02/04/2019)

‘5 ஆண்டுகள் போதவில்லை; பா.ஜ.க-வுக்கு மீண்டும் வாய்ப்பளியுங்கள்’- இல.கணேசன் வேண்டுகோள்

'கொள்ளையர்களை அடையாளப்படுத்த பி.ஜே.பி-க்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும்' என இல.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இல.கணேசன்

பி.ஜே.பி-யின்  மூத்த தலைவர் இல.கணேசன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்," தமிழகம் வரலாறுகளில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. ஆன்மிகம், தெய்வீகம் எனப் பல சக்திகள் இணைந்தது பி.ஜே.பி. தமிழகத்தில் பி.ஜே.பி வளரவில்லை என்றால் நாட்டில் வேறெங்கும் வளராது. வலுவிழந்த காங்கிரஸ் கட்சியோடு தி.மு.க கூட்டணி வைத்துள்ளது. 

தமிழகத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பி.ஜே.பி  தலைவர் அமித்ஷா பிரசாரத்திற்கு வருகிறார்கள். பி.ஜே.பி ஆட்சியில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், படித்த இளைஞர்கள் வெகுவாகப் பயனடைந்துள்ளனர். பி.ஜே.பி ஆட்சிப் பொறுப்பு ஏற்கும்போது, இந்தியாவின் நிலை மிக மோசமாக இருந்தது. அது தற்போது மாறியுள்ளது. பி.ஜே.பி காலத்தில் பல முன்னேற்றங்கள் கண்டுள்ளது. சென்னை மழை வெள்ளத்தின்போது, மத்திய அரசு சார்பில் மக்கள் ஒவ்வொருவருக்கும் 5 ஆயிரம் ரூபாய் முழுமையாகச் சென்றது. மக்களிடம் கொள்ளை அடித்தவர்களை அடையாளம் கண்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என எண்ணி இருந்தோம். 5 ஆண்டுகளில் அது முடியவில்லை. கொள்ளைக்காரர்களை அடையாளம் கண்டு சிறைக்கு அனுப்ப இன்னும் 5 ஆண்டுகள் பி.ஜே.பி-க்கு வாய்ப்பு தரவேண்டும் என்றார்.