“விதிகளை மீறிய அ.தி.மு.க... முதல்வருக்காகத் திறக்கப்பட்ட சிலை” - தேர்தல் ஆணையத்தைச் சாடும் எதிர்க்கட்சிகள் | lok sabha elections opposition party expose their discontent

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (01/04/2019)

கடைசி தொடர்பு:11:09 (02/04/2019)

“விதிகளை மீறிய அ.தி.மு.க... முதல்வருக்காகத் திறக்கப்பட்ட சிலை” - தேர்தல் ஆணையத்தைச் சாடும் எதிர்க்கட்சிகள்

ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க-விற்கு ஒரு சட்டம் தி.மு.க, அ.ம.மு.க போன்ற கட்சிகளுக்கு ஒரு சட்டமா என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

எம்.ஜீ.ஆர் சிலை

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைப்படி கட்சித் தலைவர்கள் சிலைகள் துணியால் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, இன்று  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய ஊர்களில் பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து, தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிப்பதற்காக வர இருக்கிறார். அதற்காக, காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் துணியால் மூடப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் சிலைக்கு திடீர் விடுதலைகொடுத்து, கட்சித் தொண்டர்கள் அந்தச் சிலையைக் குளிப்பாட்டி, மாலை அணிவித்து வைத்திருக்கிறார்கள். அதன் அருகிலேயே, முதலமைச்சர் பேசுவதற்காக மேடையும் போடப்பட்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர் சிலை

 

இது, 'அப்பட்டமான தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும்' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், அ.ம.மு.க, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்று கண்டனம் தெரித்திருக்கிறார்கள். இதை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கும் தேர்தல் அதிகாரிகள், எப்படித் தேர்தலை நியாயமாக நடத்துவார்கள்' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இதையெல்லாம் புகைப்படம் எடுத்து, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் தமிழகத் தேர்தல் ஆணையத்திற்கும் புகாராக அனுப்பியிருக்கிறார்கள் எதிர்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க