`டி.டி.வி.தினகரனால் அ.தி.மு.க-வுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது!'- மதுரை ஆதீனம் | TTV will join AIADMK says madurai aadheenam

வெளியிடப்பட்ட நேரம்: 17:46 (01/04/2019)

கடைசி தொடர்பு:11:09 (02/04/2019)

`டி.டி.வி.தினகரனால் அ.தி.மு.க-வுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது!'- மதுரை ஆதீனம்

``டி.டி.வி.தினகரனால் தேர்தலில் அ.தி.மு.க-விற்கு எந்தப் பாதிப்பும் இல்லை'' என மதுரை ஆதீனம் தெரிவித்தார்.

மதுரை ஆதீனத்திடம் ஆசி பெறும் அ.தி.மு.க வேட்பாளர் ராஜ் சத்தியன்

மதுரை ஆதீன மடத்தில் பவளவிழா  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க வேட்பாளர் ராஜ் சத்தியன் மற்றும்  பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு ஆசிபெற்றனர். அதைத்  தொடர்ந்து, ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி மிகப்பெரும் வெற்றிபெறும். பிரதமர் மோடி, மிகப்பெரும் திறமை படைத்தவர். பல்வேறு மொழிகளில் பேசும் வல்லமை படைத்தவர். நரேந்திர மோடி, இந்தியா பொருளாதாரத்தில் வளம்பெற பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து முன்னேற்றம் கண்டுள்ளார்.

மோடியால், தமிழகத்தில் பா.ஜ.க, அ.தி.மு.க-வுடன் இணைந்து வலுவான கூட்டணி அமைத்துள்ளது. மக்கள், அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என உரிமையோடு கேட்டுக்கொள்கின்றேன். அ.தி.மு.க-வுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் கூறுவாரா? டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க-வுடன் தேர்தலில் சேராமல் இருக்கலாம். ஆனால், நிச்சயமாக  இணைவார்கள். டி.டி.வி.தினகரனால் ஆளும்கட்சிக்கு  தேர்தலில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது'' என்றார்.