``அம்மா ரோல்ல நடிக்கிறதுல எந்த வருத்தமும் இல்ல!” - `மெட்டி ஒலி' காயத்ரி | `metti oli' actress gayathri talks about her current serial acting experience

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (01/04/2019)

கடைசி தொடர்பு:18:35 (01/04/2019)

``அம்மா ரோல்ல நடிக்கிறதுல எந்த வருத்தமும் இல்ல!” - `மெட்டி ஒலி' காயத்ரி

காயத்ரி

`மெட்டி ஒலி' புகழ் நடிகை காயத்ரி, சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, சன் டி.வி `ரோஜா' சீரியலில் நடித்துவருகிறார். இங்கே, தன் நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

``சின்னத்திரையில் 20 வருஷத்துக்கும் மேல எனக்கு நடிப்பு அனுபவம் உண்டு. இதுவரை ரொம்ப அப்பாவி மற்றும் அழுகாச்சி கேரக்டர்கள்லதான் அதிகம் நடிச்சிருக்கேன். இந்த சீரியல்ல ரொம்ப  லவ்லியா, வெகுளித்தனமான ரோல்ல நடிக்கிறேன். இதனால், எனக்கும் ஆடியன்ஸுக்கும் வித்தியாசமான உணர்வு கிடைக்குது. என் பொண்ணுக்கு இப்போ மூணு வயசு. நானும், என் கணவரும் மாறி மாறி குழந்தையைப் பார்த்துக்கிறோம். பெற்றோரா எங்க கடமையை நிறைவேற்றிய பிறகுதான், தொழிலில் கவனம் செலுத்துறோம். `ரோஜா' சீரியல்ல 28 வயசு பையனுக்கு அம்மா ரோல்ல நடிக்கிறேன். இது வெறும் நடிப்புதான். அம்மா ரோல்ல நடிக்கிறதா ஒப்புகிட்டுதானே சீரியல்ல கமிட் ஆனேன். அதனால, எந்த வருத்தமும் எனக்கில்லை. இது ஒரு வித்தியாசமான நடிப்பு அனுபவம்.

காயத்ரி

என் முதல் சீரியலான `குடும்பம்'ல தொடங்கி இப்போ வரை, பல சீரியல்கள்ல வடிவுகரசி அம்மாவுடன் இணைந்து நடிக்கிறேன். கோ-ஆர்ட்டிஸ்ட் என்பதைத் தாண்டி, அவங்க என் அம்மா மாதிரி. அதுவும் என் நடிப்புப் பயணத்தில் ஸ்பெஷல்தான். சினிமாவைவிட சீரியல் எனக்கு ரொம்பவே செட் ஆகிடுச்சு. செலெக்டிவ்வாதான் நடிக்கிறேன். அதனால, ரசிகர்களும் அன்பு செலுத்துறாங்க. இதுவே இப்போதைக்கு எனக்குப் போதும்னு நினைக்கிறேன். அதனால, நிறைய சீரியல் வாய்ப்புகள் வந்தாலும் அதை ஏத்துக்கிறதில்லை" என்கிறார் காயத்ரி.