`அம்பானிக்கும் அதானிக்கும் தரகர் வேலை பார்த்தவர்தான் மோடி!' - சீமான் சாடல் | Seeman slams modi at election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 08:45 (02/04/2019)

கடைசி தொடர்பு:11:14 (02/04/2019)

`அம்பானிக்கும் அதானிக்கும் தரகர் வேலை பார்த்தவர்தான் மோடி!' - சீமான் சாடல்

நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெகநாதனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.

சீமான்

நிகழ்ச்சியில் பேசிய சீமான், ``கடந்த 5 ஆண்டுகளாக அதானி மற்றும் அம்பானிக்குத் தரகராக வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்தான் பிரதமர் மோடி. பாகிஸ்தான் மட்டும் பக்கத்து நாடாக இல்லை என்றால், பா.ஜ.க-வுக்கு அரசியல் செய்ய எதுவுமே இருந்திருக்காது. ராகுல்காந்தி பிரதமராக வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கட்சத்தீவு மீட்கப்படும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அதை ராகுல்காந்தியால் கூறமுடியுமா. தற்போது நடப்பது தலைவருக்கான தேர்தல் கிடையாது. பெருமுதலாளிகளுக்கு வேண்டிய தரகர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நடக்கக்கூடிய தேர்தல் இது.

இந்த நிலைமையை நீக்கி, நாட்டுக்கு நல்லதொரு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலாக மாற்ற மக்கள் முன்வர வேண்டும். பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்க வருபவர்களை மக்கள் விரட்டியடிக்க வேண்டும். ஓட்டுகளைப் பணம் கொடுத்து வாங்கி அதிகாரத்துக்கு வரும் நபர்கள், மக்களுக்குச் சேவை செய்யும் அளவுக்கு நல்லவர்களாக இருக்க முடியுமா. நாங்கள் கோடிகளைக் கொட்டி தேர்தலை சந்திக்கவில்லை. நல்ல கொள்கைகளை முன்வைத்தே தேர்தலைச் சந்திக்கிறோம். பேரன்போடு இந்த மண்ணையும், மக்களையும் நாங்கள் காதலித்துக்கொண்டு இருக்கிறோம். அதை ஒருதலைக்காதல் ஆகிவிடாமல் மக்கள்தான் பார்த்துகொள்ள வேண்டும்'' என்று பேசினார்.