திரையுலகுக்கு பெரும் இழப்பு! - இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவால் காலமானார்! | Director Mahendran passed away this morning

வெளியிடப்பட்ட நேரம்: 08:12 (02/04/2019)

கடைசி தொடர்பு:08:12 (02/04/2019)

திரையுலகுக்கு பெரும் இழப்பு! - இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்.  

மகேந்திரன்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை இயக்குநர் மகேந்திரன். `முள்ளும் மலரும்', `உதிரிப்பூக்கள்', `ஜானி', `நண்டு', `மெட்டி' என்று அவர் உருவாக்கிய திரைப்படைப்புகள் எல்லாமே இன்றும் என்றும் பேசப்படுபவை. தமிழ் சினிமாவை மகேந்திரன் இல்லாமல் குறிப்பிடமுடியாது. இயக்குநராகத் தடம் பதித்த தமிழ் சினிமாவில், தனது நடிப்பின் மூலமாகவும் ரசிகர்களின் மனதைத் தொட்டவர். விஜய்யின் தெறி, ரஜினியின் பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். 

இயக்குநர்

79 வயதான இயக்குநர் மகேந்திரன் சில தினங்களுக்கு முன்னால், சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மருத்துவமனையில்   அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை குறித்து கடந்த சில நாள்களாக பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்தத் தகவலை அவரின் மகன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

பள்ளிக்கரணையில் உள்ள அவரது வீட்டில் இன்று பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக மகேந்திரனின் உடல் வைக்கப்படும். மாலை அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் எனத் தெரிகிறது.