``மறுபடியும் வந்து விடுங்கள் மகேந்திரன் சார்'' - 'உதிரிப்பூக்கள்' அஸ்வினி கண்ணீர் #Mahendran | Actor Aswini express her reverence on Director Mahendran

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (02/04/2019)

கடைசி தொடர்பு:15:19 (02/04/2019)

``மறுபடியும் வந்து விடுங்கள் மகேந்திரன் சார்'' - 'உதிரிப்பூக்கள்' அஸ்வினி கண்ணீர் #Mahendran

யக்குநர் மகேந்திரனின் நாயகிகளில் மிகச் சிறப்பான இடம் 'உதிரிப்பூக்கள்' அஸ்வினிக்கு உண்டு. பெங்களூரில் வசித்துக்கொண்டிருக்கிற அஸ்வினி நமக்கு போன் செய்து, `வாட் ஹேப்பண்ட் டு மகேந்திரன் சார்; இஸ் ஹி நோ மோர்?' என்று கேட்டவரிடம், இயக்குநர் மகேந்திரன் மறைந்த தகவலைச் சொல்ல, போனிலேயே கதறி அழ ஆரம்பித்துவிட்டார். மாலை 4 மணிக்குள் எப்படியாவது சென்னை வந்துவிடுகிறேன் என்று அழுதுகொண்டே சொன்னவருக்கு ஆறுதல் சொல்லி பேசினோம். 

அஸ்வினி இயக்குநர் மகேந்திரன் தம்பதியருடன்

``என் மன உணர்வுகளை எப்படிச் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை. என் வாழ்க்கையில் நான் அதிகபட்சமாக மரியாதை வைத்திருக்கிற நபர் மகேந்திரன். 'உதிரிப்பூக்கள்' படத்தில் நான் நடிப்பேன் என்று கனவில்கூட நினைத்ததில்லை. அப்படிப்பட்ட வாய்ப்பைக் கொடுத்த என் குரு அவர்.  நீங்கள் எல்லோரும் என்னை இன்னமும் நினைவில் வைத்துக்கொண்டிருக்க அவர்தான் காரணம். அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, அவரை நேசிக்கிற அத்தனை உள்ளங்களுக்கும், அவர் கடவுள். அவர் இல்லாத இழப்பைத் தாங்கிக்கொள்கிற பலத்தைக் கடவுள் எங்களுக்குக் கொடுக்க வேண்டும்.`மகேந்திரன் சார், ப்ளீஸ் கம் பேக் திஸ் வேர்ல்டு அகெய்ன்'' என்றவர், மறுபடியும் விசும்ப ஆரம்பிக்கிறார். 

அஸ்வினி என்னும் சிஷ்யையின் கண்ணீர், இயக்குநர் மகேந்திரன் மிக நல்ல குரு என்பதைச் சொல்லாமல் சொல்லியது.