`ஊறுகாயாக அ.தி.மு.க-வுடன் சேர்ந்துவிட்டார்கள்!'- பா.ம.க-வை விமர்சித்த திருநங்கை அப்ஸரா | congress president Absara slams admk pmk alliance

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (02/04/2019)

கடைசி தொடர்பு:10:37 (03/04/2019)

`ஊறுகாயாக அ.தி.மு.க-வுடன் சேர்ந்துவிட்டார்கள்!'- பா.ம.க-வை விமர்சித்த திருநங்கை அப்ஸரா

 ``ஊறுகாயாக அ.தி.மு.கவுடன் சேர்ந்துவிட்டார்கள்” என பா.ம.கவை மகிளா காங்கிரஸின் பொதுச்செயலாளர் திருநங்கை அப்ஸரா விமர்சித்திருக்கிறார்.

மகிளா காங்கிரசின் பொதுச்செயலாளர் திருநங்க அப்ஸரா

புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் முன்னாள் முதல்வர் வைத்திலிங்கமும், தட்டாஞ்சாவடி தொகுதி  இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் வெங்கடேசனும் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து அகில இந்திய மகிளா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அப்ஸரா ரெட்டி இன்று புதுச்சேரி முழுவதும் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ``திருநங்கையான எனக்கு முகவரி அளித்தவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.  தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையை எதிர்த்த பா.ம.க, புதுச்சேரியில் அ.தி.மு.கவோடு ஊறுகாய் போல சேர்ந்திருக்கிறது.

இந்தியாவில் 8 லட்சம் வேலைவாய்ப்புகள் பெண்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பிரதமருக்கும் பெண்களின் பாதுகாப்பு பற்றி கவலையில்லை. தி.மு.க முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைக்கு முழுக்க, முழுக்க அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது. துரைமுருகன் மகன் தேர்தலில் தோல்வியடைய வேண்டும் என்பதுதான் அந்த சோதனையின் நோக்கம். பா.ஜ.க-வின் கைக்கூலியாக அ.தி.மு.க செயல்பட்டு வருகிறது. இந்தத் தேர்தலோடு நரேந்திர மோடி காணாமல் போய்விடுவார்” என்றார்.      

நீங்க எப்படி பீல் பண்றீங்க