`புதுச்சேரி அரசியல் எதுவும் கமலுக்குத் தெரியாது!'- முதல்வர் நாராயணசாமி | Kamal dont know about puducherry politics says narayanasamy

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (02/04/2019)

கடைசி தொடர்பு:10:38 (03/04/2019)

`புதுச்சேரி அரசியல் எதுவும் கமலுக்குத் தெரியாது!'- முதல்வர் நாராயணசாமி

``நடிகர் கமலுடன் ஒரே மேடையில் விவாதம் செய்யத் தயாராக இருக்கிறேன்” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.  

நாராயணசாமி பிரசாரம்

புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் வைத்திலிங்கத்திற்கு வீடு வீடாகச் சென்று முதல்வர் நாராயணசாமி வாக்கு சேகரித்து வருகிறார். இன்று தனது நெல்லித்தோப்பு தொகுதியில் பேசிய அவர், ``2011 முதல் 2016 வரை முதல்வராக இருந்த ரங்கசாமி புதுச்சேரி மாநிலத்திற்கு எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைச் செயல்படுத்த ரங்கசாமி அனுப்பிய கோப்பிற்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அரசுடன் போராடிப் பெற்றுள்ளோம். 5 ஆண்டுக்காலமாக ரங்கசாமி புதுச்சேரியை குட்டிச்சுவராக்கிவிட்டார்.   

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பிரசாரம்

நாற்காலிக்கு ஆசைப்படாதவர் என்று கூறும் அவர், ஏன் எம்.எல்.ஏக்களை பிடிக்கும் வேலையைச் செய்து வருகிறார்? அவரின் ஜம்பம் புதுச்சேரி மக்களிடம் பலிக்காது. யார் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி ஏற்படும் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கின்றனர். மத்தியில் ராகுல் தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி அரசு அமைய இருக்கிறது. வைத்திலிங்கம் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராவார். அவர் மூலம் புதிய திட்டங்கள் புதுச்சேரிக்கு கொண்டுவரப்படும். புதுச்சேரி மாநிலத்தின் அரசியல் பற்றி நடிகர் கமலுக்கு எதுவும் தெரியாது. எங்கள் ஆட்சியில் நாங்கள் கொண்டுவந்துள்ள வளர்ச்சித் திட்டங்களை எங்களால் பட்டியல் போட்டுக் கூற முடியும். அதைப்பற்றி தெரிந்துகொள்ளாமல் பேசியிருக்கிறார் நடிகர் கமல். ஒரே மேடையில் அவருடன் இதுகுறித்து விவாதம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். அவர் தயாரா?” என்றார்.      

நீங்க எப்படி பீல் பண்றீங்க