`நீண்டகால  பிரச்னைகளை அடுக்கிய டி.டி.வி. தினகரன்' - நீலகிரி பிரசாரத்தில் விறுவிறுப்பு! | long time issues of nilgiris will solved - T.T.V. Dinakaran assured in campaign

வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (02/04/2019)

கடைசி தொடர்பு:10:39 (03/04/2019)

`நீண்டகால  பிரச்னைகளை அடுக்கிய டி.டி.வி. தினகரன்' - நீலகிரி பிரசாரத்தில் விறுவிறுப்பு!

தொகுதியின் நீண்டகால  பிரச்னைகளைப் பேசி வாக்குறுதி அளித்தார், டி.டி.வி. தினகரன்.

தினகரன்

நீலகிரி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராமசாமி போட்டியிடுகிறார். ராமசாமியை ஆதரித்து பிராசரம் செய்ய டி.டி.வி. தினகரன் இன்று ஊட்டி வந்தார். ஏ.டி.சி சந்திப்பு பகுதியில் பேசிய அவர், மாநிலப் பிரச்னைகளைப் பேசியதோடு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கியப் பிரச்னைகளையும் பட்டியலிட்டு, வாக்குறுதியாக அளித்தார். அதில்,  "நீலகிரியின் வாழ்வாதார பிரச்னையாக இருக்கும் பசுந்தேயிலைக்கு ரூ.30 நிரந்தர விலை நிர்ணயிக்கப்படும். நீலகிரியை சர்வதேச சுற்றுலாத் தளமாக மாற்ற கட்டமைப்பு வசதி மேற்கொள்ளப்படும். நாள்தோறும் அதிகரித்துவரும் மனித விலங்கு மோதல்களைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். படுகர் இன மக்களைப் பழங்குடி பட்டியலில் சேர்க்கப் பாடுபடுவோம். நீண்ட காலம் இழுபறியில் உள்ள கூடலூர் செக்‌ஷன் 17 நிலப் பிரச்சனைக்கு நடவடிக்கை எடுப்போம். 

தினகரன்

நீலகிரியில் இளைஞர்களுக்கு வேலை வாய்பை மேம்படுத்த வழிவகை செய்வோம்" என உள்ளூர் பிரச்னைகளைப் பட்டியலிட்டு வாக்குறுதிகளாக அடுக்கினார். தி.மு.க சார்பில் போட்டியிடும் ஆ.ராசா அளித்த வாக்குறுதியில், என்னால் முடிந்த வரை மத்தியில் இருந்து தொகுதிக்கு நலத் திட்டங்களைப் பெற்றுத்தருவேன் என்றார்.