திருச்சியில் மியூச்சுவல் ஃபண்டு... முதலீட்டு மந்திரங்கள்' நிகழ்ச்சி! | mutual fund awareness program

வெளியிடப்பட்ட நேரம்: 21:05 (02/04/2019)

கடைசி தொடர்பு:21:05 (02/04/2019)

திருச்சியில் மியூச்சுவல் ஃபண்டு... முதலீட்டு மந்திரங்கள்' நிகழ்ச்சி!

நாம் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை வீட்டு லாக்கரில் அப்படியே வைத்திருந்தால், ஆண்டுகள் செல்லச்செல்ல அந்தப் பணத்தின் மதிப்பு குறைந்துகொண்டே போகக்கூடும். எனவே, பணத்தைப் பாதுகாத்து வைத்திருப்பதே சேமிப்பு என்ற தவறான சிந்தனையை மாற்றி, அந்தப் பணத்தை ஏதாவதொரு திட்டத்தில் முதலீடுசெய்வதே சிறப்பான சேமிப்பு என்பதை உணர வேண்டும். 

மியூச்சுவல் ஃபண்ட்

நாம் பணியில் சேர்ந்தவுடனேயே, ஓய்வுக்காலத்திற்கான திட்டமிடலில் இறங்க வேண்டும். நமது  ஓய்வுக்காலம் இனிதாக இருக்க, அதற்கான முதலீட்டை பணியில் சேர்ந்தவுடனே தொடங்க வேண்டும். தற்போதைய சூழலில், அதிக வருமானம் தரக்கூடிய வேலைவாய்ப்புகள், தொழில்கள் பெருகியுள்ளன. கிடைக்கும் வருமானத்தை சேமித்துவைத்து, திறம்பட முதலீடு செய்வதில்தான் நிதி நிர்வாகத்தின் வெற்றியே இருக்கிறது.

மேலும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த தயக்கத்தைப் போக்கும்விதமாக, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் சிறப்புகள், வகைகள், எந்த வகை முதலீடு யாருக்குப் பொருத்தமாக இருக்கும், இந்த முதலீட்டில் கவனிக்கவேண்டியவை என்னென்ன என்பதுபோன்ற சூட்சுமங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, நாணயம் விகடன் மற்றும் ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் "மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்" நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில், முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இன்வெஸ்டர் எஜுகேஷன் தலைவர் கே.எஸ்.ராவ், ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இன்வெஸ்டர் எஜுகேஷன் & டிஸ்ட்ரிபியூட்டர் டெவலப்மென்ட் ஏவிபி எஸ்.குருராஜ்  மற்றும் ஆதித்யா பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டலத் தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றுவார்கள்.

வரும் 07.04.2019, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை, திருச்சியில் பிரீஸ் ரெசிடென்சி, கிராண்டூர் ஹாலில் நடைபெறவுள்ளது. அனுமதி இலவசம். நிகழ்ச்சியில் பங்குபெற விரும்புபவர்கள், 97909 90404 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகப் பதிவு செய்யலாம்.