ஏற்றுமதி பற்றி A டு Z கற்றுத்தரும் பசுமை விகடனின் `லாபம் தரும் வேளாண் ஏற்றுமதி' நிகழ்ச்சி! | pasumai vikatan trade training in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (02/04/2019)

கடைசி தொடர்பு:22:00 (02/04/2019)

ஏற்றுமதி பற்றி A டு Z கற்றுத்தரும் பசுமை விகடனின் `லாபம் தரும் வேளாண் ஏற்றுமதி' நிகழ்ச்சி!

விவசாயிகள் விளைபொருள்களை தயாரித்து, உள்ளூர்ச் சந்தைகளிலேயே பெரும்பாலும் விற்பனை செய்து வந்தனர். அவர்களும் ஏற்றுமதி குறித்து தெரிந்துகொள்ளும் வகையில், அண்மையில் பசுமை விகடன் இதழில், `அள்ளித்தரும் அக்கரைச் சீமை’ என்ற வேளாண் ஏற்றுமதி தொடர் கட்டுரை வெளியானது. அது வாசகர்களிடம் அதிகமான வரவேற்பையும் பெற்றது. தொடர் வெளிவந்த காலகட்டத்தில், ``ஏற்றுமதி செய்யும் வழி முறைகள் பற்றிப் பயிற்சி வகுப்புகள் நடத்துங்கள்’’ எனக் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நாணயம் விகடன் மற்றும் பசுமை விகடன் இதழ்கள் இணைந்து சென்னையில் ஏப்ரல் 28-ம் தேதி, `லாபம் தரும் வேளாண் ஏற்றுமதி’ என்ற ஒரு நாள் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்துள்ளன.

ஏற்றுமதி


ஏற்றுமதியாளர் கே.எஸ்.கமாலுதீன், ஏற்றுமதி ஆலோசகர் எஸ்.சிவராமன் ஆகியோர் பயிற்சி அளிக்கவுள்ளனர். பயிற்சிக் கட்டணம் ரூ.5000, ஏப்ரல் 15-ம் தேதிக்கு முன்பாகச் செலுத்தினால், Early Bird Offer 4000 ரூபாய் மட்டுமே.

பயிற்சி வகுப்பில் என்னென்ன தெரிந்து கொள்ளலாம்?

* ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றிச் சூத்திரங்கள்?

* லாபத்தை அள்ளித் தரும் ஏற்றுமதி யுக்திகள்?

* ஏற்றுமதிக்கு உதவும் அமைப்புகள்?

* எந்த நாடுகளுக்கு, என்ன பொருள்களை ஏற்றுமதி செய்யலாம்?

* ஏற்றுமதியில் ஏமாறாமல் இருப்பது எப்படி?

* மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை விரும்பும் நாடுகள்?

* தேங்காய், எலுமிச்சை, வாழை, மாம்பழம், புளி, காய்கறிகள், மலர்கள், வெல்லம், நறுமணப் பொருள்கள்... போன்றவற்றை ஏற்றுமதி செய்யும் வழி முறைகள் என வேளாண் பொருள்கள் ஏற்றுமதி குறித்து கற்றுக்கொள்ள அருமையான வாய்ப்பு.

பயிற்சியாளர்கள்

நிபந்தனைகள்:

1. எதிர்பாராத காரணங்களால் பயிற்சி வகுப்பு நடைபெறவில்லை என்றால் மட்டுமே பதிவு செய்தவர் செலுத்திய வகுப்புக்கான கட்டணம் விகடன் மீடியா சர்வீசஸால் திரும்ப அளிக்கப்படும்.

2. நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் அறிவு சார்ந்த தகவலுக்கு மட்டுமே. இதனால் பங்கேற்பாளர்களுக்கு ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு நாணயம் விகடன் மற்றும் விகடன் மீடியா சர்வீசஸ் பொறுப்பாகாது.

3.வகுப்புக் கட்டணமானது பயிற்சிக்குண்டான கட்டணத்தை மட்டுமே உள்ளடக்கியது.

பதிவு செய்ய https://bit.ly/2untSvL என்ற இணையதள முகவரியில் பணத்தைச் செலுத்திப் பதிவு செய்து கொள்ளவும். பயிற்சி வகுப்பு நடக்கும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். பயிற்சியின்போது காலை, மாலை தேநீர், மதிய உணவு, குறிப்பேடு வழங்கப்படும். 

மேலும் விவரங்களுக்கு : 9940022128, 9940415222