`பா.ஜ.க ஆட்சியில் சிறுபான்மை மக்கள் அச்சத்துடனே வாழ வேண்டியுள்ளது!’ - முத்தரசன் தாக்கு | Cpi mutharasan slams bjp government

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (03/04/2019)

கடைசி தொடர்பு:10:40 (03/04/2019)

`பா.ஜ.க ஆட்சியில் சிறுபான்மை மக்கள் அச்சத்துடனே வாழ வேண்டியுள்ளது!’ - முத்தரசன் தாக்கு

சிவகங்கையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்.

முத்தரசன் சி.பி.ஐ

அப்போது பேசிய அவர், "இந்த தேர்தல் தனிநபருக்கோ, கட்சிக்காரர்களுக்கோ இடையே நடக்கும் தேர்தல் அல்ல. இது ஒரு கொள்கைக்கான போராட்டம். ஜனநாயகத்தையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், நீதிமன்றம், ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளைப் பாதுகாத்திட வேண்டும். பா.ஜ.க ஆட்சியில் சிறுபான்மை மக்கள், தலித்துகள் அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது.

தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராகத் தேர்தல் முடிந்த பிறகு, ஏழைக் குடும்பங்களுக்கு 2,000 ரூபாய் வழங்குவோம் என்று பேசி வருகிறார். இதையெல்லாம் தேர்தல் ஆணையம் வேடிக்கைபார்த்து வருகிறது. மத்திய அரசு வருமான வரித்துறையை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி வருகிறது. முதல்வர் செல்லும் இடங்களில் எல்லாம் அரசியல் பேசுவது கிடையாது. அதற்கு மாறாக தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார். எடப்படி செல்லும் இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதில்லை. தோற்றுப்போவார் என்கிற பயத்தினால் தனிநபர் தாக்குதல் நடத்தி வருகிறார்.

சேலத்தையொட்டி இருக்கும் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து அதில் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டுவதற்கு முதல்வரே அடிக்கல் நாட்டினார். ஆக உச்ச நீதிமன்றம் நீர்ப்பிடிப்புப் பகுதியில் கட்டடம் கட்டக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறது. பா.ஜ.க வெற்றி பெற்றால் ஜனநாயகம் இருக்காது. அ.தி.மு.க கூட்டணி பச்சை சந்தர்ப்பவாதக் கூட்டணி. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, கறுப்புப் பணம் மீட்டு 15 லட்சம் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் டெபாசிட் செய்யப்படும் என்று சொன்னாரே இதுவரையிலும் ஏதாவது நடந்திருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பினார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க