வயநாடு வரும் பிரியங்கா - நாளை வேட்புமனுத் தாக்கல் செய்யும் ராகுல் காந்தி! | Rahul to file the nomination tomorrow

வெளியிடப்பட்ட நேரம்: 10:25 (03/04/2019)

கடைசி தொடர்பு:10:44 (03/04/2019)

வயநாடு வரும் பிரியங்கா - நாளை வேட்புமனுத் தாக்கல் செய்யும் ராகுல் காந்தி!

யநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி நாளை வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் கலந்துகொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராகுல் காந்தி - பிரியங்கா

காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதி தொகுதி மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கேரள மாநிலத்தின் 20 தொகுதிகளுக்கும் வரும் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நடந்துகொண்டிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை நாளை (ஏப்.4) தாக்கல் செய்கிறார். இதற்காக இன்று விமானம் மூலம் கோழிக்கோடு வருகிறார்.

ராகுல் பிரியங்கா

இரவு கோழிக்கோட்டில் தங்கும் அவர் வியாழக்கிழமை காலை வயநாட்டுக்குச் செல்கிறார். கட்சித் தொண்டர்களுடன் பேரணியாக சென்று வயநாடு கலெக்டர் அலுவலகத்தில் ராகுல் வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். ராகுல் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி மற்றும் பேரணியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொள்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிர்வாகிகளும் இதில் கலந்துகொள்கிறார்கள்.