அதிகாரிகள் லஞ்சம் வாங்கத்தான் உணவு பாதுகாப்புச் சட்டம்: விக்கிரமராஜா பேட்டி | Food Security Act, public, Bribe, officer, Merchant Association peramaippu, vikkiramaraja, vellore

வெளியிடப்பட்ட நேரம்: 15:02 (28/05/2013)

கடைசி தொடர்பு:15:08 (28/05/2013)

அதிகாரிகள் லஞ்சம் வாங்கத்தான் உணவு பாதுகாப்புச் சட்டம்: விக்கிரமராஜா பேட்டி

வேலூர்: உணவு பாதுகாப்பு சட்டத்தால் பொதுமக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை. அதே நேரத்தில் அதில் பணியாற்றும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்குத்தான் பயன்படுகிறது என வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா வேலூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ''உணவு பாதுகாப்புச் சட்டம் 2006ஆம் ஆண்டு தொடங்கி, 2011ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தால் பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையும் அளிக்கவில்லை. மாறாக, உணவு பாதகாப்பு சட்டத்தில் பணியாற்றுகிற அரசு அலுவலர்களுக்கு லஞ்சம் வாங்குவதற்குதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு சட்ட ஊழியர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை பாராட்டுக்குரியது. தமிழகத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் 555 பணி புரிகின்றனர். ஆனால், மிகப்பெரிய நகரமான மும்பையில் 235 பேர் தான் பணிபுரிகின்றனர். இதுவரை இச்சட்டத்தை 13 மாநிலங்களில் அமல்படுத்தப்படவில்லை. முதல்வர் ஜெயலலிதா இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

வரும் ஜூன் 2வது வாரத்தில் ஆட்சி மன்ற குழு ஒன்றை அமைக்க உள்ளோம். அதில் இச்சட்டத்தை குறித்து நாங்கள் தீர்மானம் போட இருக்கிறோம். முதல்வருக்கும், மத்திய அரசுக்கும் இதுகுறித்து தெளிவான விளக்கங்களை அனுப்ப உள்ளோம். இந்திய கலாச்சாரத்துக்கு வேறுபட்ட நிலையில்தான் இச்சட்டம் உள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமானால், 90 சதவீத ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சட்டத்தை சரியான திருத்தங்கள் கொண்டு வந்தால்தான் முழுமை அடைய முடியும்'' என்றார்.

-ஏ.சசிகுமார்

படம்: ச.வெங்கடேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்