``முன்பு நிறைய கோபம் வரும்; இப்போ குறைச்சுக்கிட்டேன்!" - நடிகை பானுப்ரியா | actress bhanupriya talks about her personal life

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (03/04/2019)

கடைசி தொடர்பு:17:10 (03/04/2019)

``முன்பு நிறைய கோபம் வரும்; இப்போ குறைச்சுக்கிட்டேன்!" - நடிகை பானுப்ரியா

பானுப்ரியா

நாயகியாகப் புகழ்பெற்ற நடிகை பானுப்ரியா, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் பெயரிடப்படாத படத்தில் அவர் அம்மாவாக நடித்துக்கொண்டிருக்கிறார். தன் பர்சனல் பக்கங்களைப் பகிர்கிறார், பானுப்ரியா.

``சின்ன வயசுல வெளியிடங்கள்ல அமைதியா இருப்பேன். ஆனா, வீட்டுலயும் நண்பர்களோடு விளையாடும்போதும் செம ரகளை பண்ணுவேன். சாவித்ரி, சரோஜா தேவி, ஜெயலலிதா, சுஜாதா, சுஹாசினி ஆகியோரின் நடிப்புதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். என் முதல் படம், `மெல்லப் பேசுங்கள்'. அப்போ ரொம்ப வெகுளியா இருந்தேன். அதில் `செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு'ங்கிற ஒரு பாடல் வரும். புதுக் கட்டடத்துக்காக அஸ்திவாரம் போடப்பட்ட இடத்தில் அப்பாடல் ஷூட்டிங் நடந்துச்சு. `என்ன சார், இங்க செவ்வந்திப்பூவும் இல்லை. வீடும் இல்லையே'னு இயக்குநர் சந்தானபாரதி சார்கிட்ட அப்பாவியா கேட்டேன். `இனிதான் இந்த இடத்தில் நீங்க வீடு கட்டப்போறீங்க'னு சிரிச்சுட்டே சொன்னார். 

பானுப்ரியா

தொடர்ந்து சினிமா உலகத்தை நல்லா புரிஞ்சுகிட்டு, நடிகையா எனக்குனு ஓர் அடையாளத்தை ஏற்படுத்திகிட்டேன். பலதரப்பட்ட வேடங்கள்லயும் நடிச்சேன். அதில், சில படங்கள்ல அம்மன் வேடங்கள்ல நடிச்சது ஸ்பெஷலான அனுபவங்கள். அதற்கு என் முக அமைப்புதான் ப்ளஸ் பாயின்டா அமைஞ்சது. முன்பெல்லாம் நிறைய கோபம் வரும். இப்போ கோபத்தைக் குறைச்சுக்கிட்டேன். பெரிசா எந்த விஷயத்துக்கும் ஆசைப்படமாட்டேன். எதிர்கால வாழ்க்கைப் பத்தி எந்த எதிர்பார்ப்பும் எனக்கில்லை. இப்போ டான்ஸ், மியூசிக், சமையல்தான் என் பொழுதுபோக்கு விஷயங்கள். பிடிச்ச கதைகளில் சந்தோஷமா நடிச்சுகிட்டு இருக்கேன்" என்கிறார் மகிழ்ச்சியுடன். 

ஏமாற்றத்தில் முடிந்த முதல் சினிமா வாய்ப்பு, அமிதாப் பச்சன் அளித்த விருந்து, ஆச்சர்யம் தந்த சைதை தமிழரசி, கமல்ஹாசன் அட்வைஸ், கணவரின் இழப்பு உட்பட தன் வாழ்க்கைப் பயணத்தை முழுமையாகப் பகிர்ந்துள்ளார், பானுப்ரியா. அவள் விகடனில், `எவர்கிரீன் நாயகிகள்' என்ற தொடரில். பானுப்ரியாவின் அந்த விரிவான பேட்டியைக் காண, `ஆஹா... சைதை தமிழரசி' - இந்த லிங்கை கிளிக் செய்யவும்.