`காலையில் தகுதிச் சுற்று, மாலையில் மிஸ் கூவாகம் இறுதிச்சுற்று!'- ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் | miss koovagam to be held on april 15

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (03/04/2019)

கடைசி தொடர்பு:17:30 (03/04/2019)

`காலையில் தகுதிச் சுற்று, மாலையில் மிஸ் கூவாகம் இறுதிச்சுற்று!'- ஒருங்கிணைப்பாளர்கள் தகவல்

விழுப்புரம் மாவட்டம், கூவாகத்தில் இருக்கும் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவில், இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்துகொள்வார்கள். இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருநங்கைகளுக்கான `மிஸ் கூவாகம்’ அழகிப் போட்டி விழுப்புரம் காமராஜர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இது குறித்து கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காக இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அருணா மற்றும் சுபிக்‌ஷாவிடம் பேசினோம்.

மிஸ் கூவாகம்

இந்த ஆண்டு `மிஸ் கூவாகம்' நிகழ்வு ஏப்ரல் 15-ம் தேதி நடைபெற இருக்கிறது. இது ரொம்பவே ஸ்பெஷல். ஏனெனில், நாங்க அந்த தினத்தை தேசிய திருநங்கையர் தினமாகக் கொண்டாடுவோம். அழகிப் போட்டியுடன் சேர்ந்து தேசிய திருநங்கையர் தினத்தையும் கொண்டாட இருக்கிறோம். `மிஸ் கூவாகம்' அழகிப் போட்டியைப் பொறுத்தவரை காலையில் இரண்டு தகுதிச் சுற்றுகள் நடக்கும். அந்த இரண்டு சுற்றுகளில் தேர்வானவர்களுக்கு மாலையில் பிரமாண்டமான இறுதிச்சுற்று நடைபெறும். இறுதிச்சுற்றில் தேர்வாகிற திருநங்கை `மிஸ் கூவாகம் 2019' பட்டத்தைப் பெறுவார். இந்த நிகழ்வை தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு நடத்துகிறது. இதுவெறும் அழகிப் போட்டி மட்டுமல்ல. இந்த நிகழ்ச்சியில் இந்த ஆண்டு சாதித்த திருநங்கைகளுக்கு `இளம் சாதனை திருநங்கை' விருதையும் வழங்கிப் பெருமைப்படுத்த இருக்கிறோம். இந்த அழகிப் போட்டியில் பல ஊர்களிலிருந்தும் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொள்வார்கள்'' என்றார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க