டி.டி.வி.தினகரனின் செல்வாக்குள்ள மாவட்டத்தில் வாக்கை கவரும் ஓ.பி.எஸ்! | ops election campaign at usilampatti

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (03/04/2019)

கடைசி தொடர்பு:11:26 (04/04/2019)

டி.டி.வி.தினகரனின் செல்வாக்குள்ள மாவட்டத்தில் வாக்கை கவரும் ஓ.பி.எஸ்!

தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தன் மகன் ரவீந்திரநாத்குமாரை வெற்றி பெற வைக்க ஒரு தந்தை என்ற முறையில் பல முயற்சிகளை செய்து வருகிறார் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். ஆனால், ரவீந்திரநாத்தை எதிர்த்து போட்டியிடும் தங்கத்தமிழ்செல்வன் கடுமையாக வேலை செய்து வருகிறார். அதனால், இங்கு தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.

ஓ.பி.எஸ்


தேனி நாடாளுமன்றத் தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் தங்கத் தமிழ்செல்வன் சார்ந்த பிரமலைக்கள்ளர் சமூகம் மத்தியில் ஓ.பி.எஸ்ஸுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரமாகப் பரப்பி வருகிறார்கள். டி.டி.வி.தினகரனுக்கு செல்வாக்குள்ள மாவட்டம் என்பதால்  அ.ம.மு.க.வினர். இத்தொகுதியைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இந்த நிலையில் இச்சமூகத்தினரை கவரும் வகையில், கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடிய பெருங்காமநல்லூர் தியாகிகள் தினம் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று எடப்பாடி தேர்தலுக்கு முன் அறிவித்தார். அதுபோல் அவர்கள் விரும்பிய வகையில் சாதிச் சான்றிதழ் வழங்கவும் கமிட்டியை நியமித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு 100-ம் ஆண்டு நினைவு தினம் என்பதால், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை பெருங்காமநல்லூரில் அ.தி.மு.க-வினர் நடத்தினர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்க, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா ஆகியோருடன் தேனி நாடாளுமன்ற வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் ராஜ்சத்யன் விருதுநகர் தே.மு.தி.க நாடாளுமன்ற வேட்பாளர் அழகர்சாமி, ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளர் லோகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க