`நான் கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவன்' - மோடி பாணியில் வாக்கு சேகரிக்கும் தே.மு.தி.க வேட்பாளர்! | i am coming from poor family says virudhunagar dmdk candidate

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (03/04/2019)

கடைசி தொடர்பு:11:29 (04/04/2019)

`நான் கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவன்' - மோடி பாணியில் வாக்கு சேகரிக்கும் தே.மு.தி.க வேட்பாளர்!

நான் ஒரு ஏழைத்தாயின் மகன் என பிரதமர் நரேந்திரமோடி கூறியது போல விருதுநகர் தொகுதி தே.மு.தி.க வேட்பாளரும், நான் கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவன் எனக் கூறி அனுதாபமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க, பா.ஜ.க, புதிய தமிழகம், பா.ம.க, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி சார்பில் தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமி போட்டியிடுகிறார். சாத்தூர், சிவகாசி பகுதிகளில் ஏற்கெனவே பிரசாரம் செய்துள்ள அவர் தற்போது விருதுநகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி

``இவர் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் ஜெயிச்சா நீங்க ஜெயிச்ச மாதிரி. அவர எப்போ வேண்டுமானாலும் சந்திக்கலாம். அதனால் எல்லோரும் அவருக்கு ஓட்டு போடுங்க'' எனக் கூறி கூட்டணிக் கட்சியினர் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

வேட்பாளர் அழகர்சாமியோ, ரசிகர் மன்றத்திலிருந்து அரசியலுக்கு வந்தவன் நான். கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவன். மக்களின் கஷ்டம் என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும் என்பதை மட்டுமே கூறி அனுதாப வாக்கு சேகரித்து வருகிறார். இதனால் ஜெயிச்சா தொகுதிக்கு என்ன செய்வேன்னு சொன்னா தானே இவருக்கு ஓட்டு போடவா வேண்டாமானு முடிவெடுக்க முடியும். ஆனால்  ஏழைத்தாயின் மகன் அப்படினு மோடி சொன்ன மாதிரியே இவரும் நான் கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவன்னு கூறியே ஓட்டு கேட்கிறார் எனப் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.