``எந்தச் சூழலிலும் ஆட்குறைப்பு இல்லை!'' - பி.எஸ்.என்.எல் மறுப்பு | BSNL denies laying off news

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (04/04/2019)

கடைசி தொடர்பு:12:35 (04/04/2019)

``எந்தச் சூழலிலும் ஆட்குறைப்பு இல்லை!'' - பி.எஸ்.என்.எல் மறுப்பு

பி.எஸ்.என்.எல் நிறுவனம்  54,000 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்திருப்பதாகவும் இதனால், அந்நிறுவனம் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஜியோ வருகை காரணமாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகவும் சொல்லப்பட்டது. தேர்தல் முடிந்து முடிவு வெளியான பிறகு, பி.எஸ்.என்.எல் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய இருப்பதாகத் தகவல் பரவியது. இந்தச் செய்தியால் நிறுவன ஊழியர்களிடமும் தேவையில்லாத பயம் உருவானது. 

பி.எஸ்.என்.எல்

 

இந்நிலையில், பி.எஸ்.என்.எல் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவோ, ஓய்வு பெறும் வயது குறைக்கவோ அல்லது வி.ஆர்.எஸ் திட்டத்தின் கீழ் ஆட்குறைப்பு செய்வது குறித்தோ எந்தச் சூழலிலும் ஆலோசிக்கவில்லை என்று பி.எஸ்.என்.எல் நிறுவன தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்த்தவா தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இத்தகைய செய்திகள் தவறானது என்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றை படிப்படியாக வழங்கப்பட்டு வருவதாகவும் அனுபம் ஸ்ரீவஸ்த்தவா தன் ட்விட்டரில் கூறியுள்ளார்.

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் கூறுகையில், ''இந்த நிறுவனம் சிறப்பான முறையில் செயல்படுகிறது. வாடிக்கையாளர்கள் எந்த அச்சமும் அடையத் தேவையில்லை. தொடர்ந்து மக்களுக்கு சிறப்பான சேவை வழங்கும்''  என்று தெரிவித்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க