`சிவாஜி கணேசனின் இடத்துக்குப் பொருத்தமானவர் மோடி மட்டுமே!'- எ.வ.வேலு கிண்டல் | Actor sivaji ganesan place replace only pm modi, says velu

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (04/04/2019)

கடைசி தொடர்பு:13:00 (04/04/2019)

`சிவாஜி கணேசனின் இடத்துக்குப் பொருத்தமானவர் மோடி மட்டுமே!'- எ.வ.வேலு கிண்டல்

``நடிகர் சிவாஜி கணேசன் மட்டும் சினிமாவில் இல்லை என்றால், அந்த இடத்துக்கு மிகவும் பொருத்தமாக இருப்பவர் நம் பிரதமர் மோடிதான்'' என்று தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

மோடி

நாமக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் சின்ராஜை ஆதரித்து பரமத்திவேலூரில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``எதிர்க்கட்சி கூட்டணி மெகா கூட்டணியும் இல்லை, மகா கூட்டணியும் இல்லை. அந்தக் கூட்டணியில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு கூட்டணி எனக் கூறி வருகின்றனர். தி.மு.க- காங்கிரஸ் மதச்சார்பற்ற கூட்டணி என்று மட்டுமே முன்னிலைப் படுத்தப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிக் கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்பதற்கு இதுவே ஒரு பெரிய உதாரணமாக உள்ளது. இதன் காரணமாக எதிர்க்கட்சியில் உள்ள தொண்டர்கள் மத்தியிலும் ஒற்றுமை இல்லை. தி.மு.க சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் சின்ராஜ் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவது உறுதி.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது நடந்த தேர்தலில் மோடியா, லேடியா என்று தேர்தலைச் சந்தித்தார். ஜெயலலிதா அப்போது மோடியுடன் இணக்கமாக இருந்ததில்லை. ஆனால், இன்று மோடியை அ.தி.மு.க-வினர் 'டாடி'  எனக்கூறி வருகின்றனர். இது ஜெயலலிதாவுக்கு அவர்கள் செய்த துரோகமாகவே பார்க்கப்படுகிறது. டெல்லியில் விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம் நடத்தினர். ஆனால், அவர்களைப் பார்க்க மோடிக்கு நேரம் இல்லை. வெளிநாட்டுக்குச் செல்வதற்கே அதிக நேரத்தை ஒதுக்கினார். தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப்  பிரதமர் மோடி வந்து பார்க்கவில்லை. ஆனால், தேர்தல் வந்தவுடன் தமிழகத்துக்கு நான்கு முறை வருவதாக கூறுகிறார். நடிகர் சிவாஜி கணேசன் இல்லை என்றால், அந்த இடத்தில் பொருத்தமாக இருப்பவர் பிரதமர் மோடிதான். மோடிக்கும்,  நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் குறித்து என்னவென்று தெரியாது என பி.ஜே.பி. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியே கூறியுள்ளார். மீண்டும் மோடி பிரதமரானால் அவர் சர்வாதிகார ஆட்சிதான் நடத்துவார்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க