கையில் ரூ.40 ஆயிரம், வங்கிகளில் ரூ.72 லட்சம் கடன் - ராகுல் காந்தியின் சொத்துப் பட்டியல்..! | Congress leader Rahul Gandhi's asset details

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (04/04/2019)

கடைசி தொடர்பு:20:10 (04/04/2019)

கையில் ரூ.40 ஆயிரம், வங்கிகளில் ரூ.72 லட்சம் கடன் - ராகுல் காந்தியின் சொத்துப் பட்டியல்..!

ராகுல் காந்தியிடம், கையில் ரூ.40 ஆயிரமும் வங்கிகளில் ரூ.17 லட்சமும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாட்டில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், வேட்புமனுவில் ராகுல் காந்தியின் சொத்துப் பட்டியல் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, அசையும் சொத்தாக ரூ.5 கோடியே 80 லட்சத்து 58 ஆயிரத்து 794, அசையா சொத்தாக ரூ. 7 கோடியே 93 லட்சத்து 3 ஆயிரத்து 977 ஆக உள்ளது. இதில், சுய சொத்தாக ரூ 8 கோடியே 75 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும், பூர்விக சொத்தாக ரூ.1 கோடியே 32 லட்சத்து  48 ஆயிரத்து 284 இருக்கிறது. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் ரூ.72 லட்சத்து ஆயிரத்து 904 ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி மீது ஐந்து கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவரது கையில் ரூ.40 ஆயிரமும் வங்கிகளில் ரூ.17 லட்சத்து 93 ஆயிரத்து 693 இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.  முதலீடு மற்றும் ஷேர் மார்க்கெட்டில் ரூ. 5 கோடியே 19 லட்சத்து 44 ஆயிரத்து 682 உள்ளது. தபால் மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றில், ரூ. 39 லட்சத்து 89 ஆயிரத்து 37 சேமிப்பு உள்ளது. மேலும், 333.300 கிராம் தங்கம் (மதிப்பு ரூ.2 லட்சத்து 91 ஆயிரத்து 367) கைவசம் உள்ளது. ராகுல் காந்தியின் பெயரில் எந்த வாகனமும் இல்லை.