`இவனை எங்கு பார்த்தாலும் அடிப்போம்!' - கோவை சிறுமியை வன்கொடுமை செய்த சந்தோஷ்குமாரை தாக்கிய இளைஞர்கள் | Santhosh beat by people in kovai hospital

வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (04/04/2019)

கடைசி தொடர்பு:21:50 (04/04/2019)

`இவனை எங்கு பார்த்தாலும் அடிப்போம்!' - கோவை சிறுமியை வன்கொடுமை செய்த சந்தோஷ்குமாரை தாக்கிய இளைஞர்கள்

கோவை சிறுமி  கொலை சந்தோஷ்குமாருக்கு தர்ம அடி

கோவை அருகே, 6 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள சந்தோஷ்குமார், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது, இளைஞர்கள் சிலர் அவரை சரமாரியாகத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை துடியலூர் அருகே, 6 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தோஷ் குமார் என்பவரைக் கைதுசெய்து,  கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளது போலீஸ். இந்நிலையில்,  இன்று பரிசோதனைக்காக சந்தோஷ்குமாரை கோவை மத்திய சிறையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தது போலீஸ். பலத்த போலீஸ்  பாதுகாப்புடன்  அழைத்து வரப்பட்ட சந்தோஷ்குமாருக்கு, சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனைக்குப் பிறகு போலீஸாரால் வெளியே அழைத்துவரப்பட்ட சந்தோஷ்குமாரை அங்கிருந்த பொதுமக்கள் தாக்கினர்.

இதனால், மருத்துவமனை வளாகத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.  'ஆறு வயசு குழந்தையை இப்படி செஞ்சவனை மன்னிக்கவே கூடாது' என்று சொல்லி சந்தோஷ்குமாரை இளைஞர்கள்  சரமாரியாகத் தாக்கினர். இதை எதிர்பாராத போலீஸார், மிகவும் சிரமப்பட்டு பொதுமக்களிடமிருந்து அவரை மீட்டு, மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச்சென்றனர்.  சந்தோஷ்குமாரைத் தாக்கிய இளைஞர்கள், எங்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை. சந்தோஷ்குமாரை எங்கு பார்த்தாலும் தாக்குவோம் எனவும், அதனால் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்வோம் எனவும்  தெரிவித்தனர். இந்தச் சம்பவம், கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க