கமலைப் பற்றி சொல்ல என்ன உள்ளது? - செல்லூர் ராஜு ஆவேசம்! | sellur raju talks about kamalhassan

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/04/2019)

கடைசி தொடர்பு:06:00 (05/04/2019)

கமலைப் பற்றி சொல்ல என்ன உள்ளது? - செல்லூர் ராஜு ஆவேசம்!

'கமல்ஹாசனை மக்கள் மறந்துவிட்டார்கள். அவரைப் பற்றி சொல்ல என்ன உள்ளது' என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

செல்லூர் ராஜூ

மறைந்த பி.கே.மூக்கையா தேவர், மூன்று முறை உசிலம்பட்டி எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றியவர்.  ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாராகப் பதவி வகித்து, அப்பகுதி மக்களின் ஆதரவைப் பெற்றார். மேலும், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவரது பிறந்தநாள் விழா பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், மதுரை காளவாசல் பகுதியில் உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் மதுரை அ.தி.மு.க நாடாளுமன்ற வேட்பாளர் ராஜ் சத்யன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர்.

அப்போது அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், "அ.தி.மு.க-வில் அனைவருடைய கருத்துக்களையும் கேட்டு முடிவெடுக்கப்படுகிறது. தனியாக யாரும் முடிவெடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் புரளிகள் வரத்தான் செய்யும். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அ.தி.மு.க கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். இதில் மாற்றுக் கருத்து இல்லை. தற்போதைய ஆட்சி இன்று முடிந்துவிடும், நாளை முடிந்து விடும் எனக் கூறிக்கொண்டிருந்த தி.மு.க-வின் முன், சின்னமருது பெரியமருது போல முதல்வர் மற்றும் துணை முதல்வர் அவர்களும் சிறப்பாக ஆட்சிசெய்துகொண்டிருக்கிறார்கள். பதவி கிடைக்கவில்லை என்று ராஜகண்ணப்பன் மற்ற கட்சிகளுடன் சேர்ந்துவிட்டார். ராஜகண்ணப்பன் ஒரு பச்சோந்தி. கமலஹாசனை மக்களே மறந்துவிட்டார்கள். அவரைப் பற்றி என்ன கேள்வி இருக்கிறது'' என்று தெரிவித்தார்.