பிரதமர் மோடியா? மன்மோகன் சிங்கா? - விருதுநகர் கூட்டத்தில் குழம்பிய ஜி.கே.வாசன் | g.k.vasan slams congress alliance

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (05/04/2019)

கடைசி தொடர்பு:08:50 (06/04/2019)

பிரதமர் மோடியா? மன்மோகன் சிங்கா? - விருதுநகர் கூட்டத்தில் குழம்பிய ஜி.கே.வாசன்

விருதுநகரில் தே.மு.தி.க வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பிரதமர் மோடியின் பெயரை உச்சரிக்க முடியாமல் குழம்பியதால் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர்.

ஜி.கே.வாசன்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விருதுநகரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் இந்தியாவுக்கு முக்கியமான தேர்தல். இந்தியா வளமான நாடு மட்டுமல்ல. வளர்ந்த, பாதுகாப்பான நாடு. இதுபோன்ற பாதுகாப்பான, வளர்ச்சியான வளமான இந்தியாவை உருவாக்கும் திறமை பிரதமர் நரேந்திரமோடிக்கே உண்டு என்பதற்குப் பதிலாக பிரதமர் மன்மோகன், நரேந்திர சிங் மோடி எனக் குழம்பினார். இதைக் கண்டு கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஜி.கே.வாசன்

தொடர்ந்து பேசிய அவர், ``மன்மோகன் சிங் ஆட்சியில் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டபோது தீர்வு காண முடியாத அரசாக இருந்தது. மன்மோகன் சிங் அரசையும், மோடி அரசையும் ஒப்பிட்டுப் பார்த்து நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் எதார்த்தமாக பழகக் கூடியவர்கள். திமுக-காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. சிறுபான்மை மக்களை ஏமாற்றும் கூட்டணி. மதவாதம், மதச்சார்பின்மை குறித்து பேசத் தகுதியில்லை. காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 9 தொகுதிகளை பெற்றுக்கொண்டு அதில் ஒரு சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவரை கூட நிறுத்தவில்லை. பல பிரச்னைகளை தீர்க்க வேண்டும். பட்டாசு தொழில் பிரச்னையை தீர்ப்பதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி மலர வேண்டும் எனத் தெரிவித்தார்.