`சிவகங்கை என்றால் நல்ல வர்த்தக நகரம் என்ற அளவுக்கு மாற்றிக்காட்டுவேன்!' - கார்த்தி சிதம்பரம் | Karthi Chidambaram lok sabha election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (05/04/2019)

கடைசி தொடர்பு:08:51 (06/04/2019)

`சிவகங்கை என்றால் நல்ல வர்த்தக நகரம் என்ற அளவுக்கு மாற்றிக்காட்டுவேன்!' - கார்த்தி சிதம்பரம்

கார்த்திக் சிதம்பரம் பிரசாரம் செய்யும் ஸ்டைலை மாற்றி மக்களுக்குப் பிடித்த மாதிரி பேசத் தொடங்கிருப்பது கட்சித் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 
கார்த்தி சிதம்பரம்
 
சிவகங்கை கடை வீதிகளில் பிரசாரம் செய்த கார்த்திக் சிதம்பரம் தன்னுடைய நிலையில் இருந்து கீழே இறங்கி,  `வியாபாரிகளுக்கு ஒரு பிரச்னை என்றால் நான் ஓடோடி வருவேன்; போலீஸ் ஸ்டேஷனுக்கு பேசணும்னாலும் நான் உங்களுக்காக பேசுவேன். நான் ஒரு வணிகன். எனக்குத் தெரியும் தொழில் செய்வதில் எவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது என்று, உங்களுடைய தொழிலில் ஏற்படக்கூடிய ஜி.எஸ்.டி பிரச்னை வரைக்கும் என்னை அணுகலாம். சிவகங்கை நகரை காரைக்குடிக்கு நிகராக மாற்றுவேன். நிறைய தொழில் நிறுவனங்கள் இங்கே அமைக்கப்படும். சிவகங்கையில் இருக்கும் பழைய வீடுகளை ராஜஸ்தானில் இருக்கும் எக்கோ டூரிஸம் போல் மாற்றுவேன். இங்குள்ள கோயில்களைச் சுற்றி சுற்றுலாத் தலமாக மாற்றுவேன்.
 
சிவகங்கை என்றாலே நல்ல வர்த்தக நகரம் என்று எல்லோராலும் பேசப்படும் அளவுக்கு மாற்றுவேன் என்று பேசினார். மேலும், `பக்கத்தில் சுண்டல் விற்றவரிடம் சுண்டல் கொஞ்சம் வாங்கி சாப்பிட்டுவிட்டு, உங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றாலும் என்னிடம் வாருங்கள். உங்களுக்காக  நான் இருக்கிறேன்' என்று கார்த்திக் சிதம்பரம் இயல்பாகப் பேசியது அனைவருக்கும் வியப்பாக இருந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க