``துரோகிகளை அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்'' - எடப்பாடி பழனிசாமி! | Edappadi palanisami slams ttv dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (05/04/2019)

கடைசி தொடர்பு:08:51 (06/04/2019)

``துரோகிகளை அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்'' - எடப்பாடி பழனிசாமி!

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமி மற்றும் சாத்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் ராஜவர்மன் ஆகியோரை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவல்பட்டி, தாயில்பட்டி, படந்தால், சாத்தூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

எடப்பாடி

அவர் பேசும்போது, ``துரோகிகளால்தான் இடைத்தேர்தலை சந்திக்கிறோம். இடைத்தேர்தல் வரக் காரணமான துரோகிகளை அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். இடைத்தேர்தலில் போட்டியிடும் அத்தனை பேரும் வெற்றி பெறுவது உறுதி. பட்டாசுத் தொழில் பாதுகாக்கப்படுவது உறுதி.

உச்ச நீதிமன்றத்தில் வாதாடி பட்டாசுத் தொழிலை காக்க அரசு துணை நிற்கும். சிவகாசி, கூட்டுக்குடிநீர் திட்டம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சாத்தூர், சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் 420 கோடியில் நல்லத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். அ.தி.மு.கவை உடைக்க வேண்டும். ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என நினைக்கும் துரோகிகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றார்.