`எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது கண்துடைப்பு மட்டுமே!' - கமல் குற்றச்சாட்டு | kamal slams state and central government

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (05/04/2019)

கடைசி தொடர்பு:08:51 (06/04/2019)

`எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது கண்துடைப்பு மட்டுமே!' - கமல் குற்றச்சாட்டு

தேர்தல் நேரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது கண் துடைப்பு மட்டுமே என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்

மதுரை நாடாளுமன்றத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரான அழகருக்கு வாக்களிக்கக் கோரி மதுரையில் பல்வேறு இடங்களில் கமல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, ``மக்களை நேர்மையாக சந்திக்கும் தைரியம் மக்கள் நீதி மய்யத்துக்கு உண்டு. தேர்தல் நேரத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது ஒரு கண்துடைப்பு வேலை மட்டுமே. முன்பெல்லாம் தேர்தல் நேரத்தில் பிரசாரத்தில் நெருப்பு பறக்கும், ஆனால் இப்பொழுது செருப்புதான்  பறக்கிறது.

மக்கள்  கடுமையான கோபத்தில் உள்ளனர். இதில் மக்கள் மீது குற்றச்சாட்டு இல்லை அட்டூழியம் செய்யும் சில அரசியல் கட்சிகள் மீது தான். சித்திரை திருவிழா அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்களிக்கும் மக்களுக்கும் கடும் சிரமம். நாட்டு நலன்தான் முக்கியம், பிரதமர் யார் என்பது முக்கியமல்ல. தேர்தலுக்கு பின்பு இழுபறி ஏற்பட்டால் தன்னுடைய குதிரைகளைக் கொண்டு பெரிய கட்சிகளிடம் வியாபாரம் செய்யப் போகிறார்கள். அழகர் மலையான் வைகை ஆற்றில் இறங்குவதுபோல இந்த அழகர் வேட்பாளரை தேர்தலில் வெற்றிபெறச் செய்யுங்கள்'' என்றார்.