இரட்டைஇலைச் சின்னம் பதித்த சேலைகள்; ஆரத்திக்கு 500 ரூபாய் - கண்டுகொள்ளாதத் தேர்தல் ஆணையம்! | The AIADMK has not following Election Code of Conduct in Tamil Nadu

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (05/04/2019)

கடைசி தொடர்பு:08:52 (06/04/2019)

இரட்டைஇலைச் சின்னம் பதித்த சேலைகள்; ஆரத்திக்கு 500 ரூபாய் - கண்டுகொள்ளாதத் தேர்தல் ஆணையம்!

ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் சூழலில், அவற்றை மீறும் வகையில் அ.தி.மு.க நடந்துகொள்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இரட்டை இலை சின்னம்

நேற்று, தேனி மாவட்டம் கம்பத்தில் சுபா டிராவல்ஸ் என்ற தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் பண்டல் பண்டல்களாக இரட்டை இலைச் சின்னம் பதித்த சேலைகள் இருப்பதாகத் தேர்தல் பறக்கும் படைக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு சென்று சோதனை நடத்திய அதிகாரிகள் மற்றும் போலீஸார், 2000-க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் பண்டல்களில் கட்டிவைக்கப்பட்டிருந்த இரட்டை இலைச் சின்னம் பதித்த சேலைகளைப் பறிமுதல் செய்தனர்.

ஓ.ராஜா

இந்நிலையில், அதே சின்னம் பதித்த சேலைகளைத் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, பொதுமக்களுக்கு வழங்குவது போன்ற படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போக, ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார் பிரசாரத்துக்குச் செல்லும்போது அவரை வரவேற்று ஆரத்தி எடுத்தால் 500 ரூபாய் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.

ஓ.ராஜா

இதை மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாநிலத் தேர்தல் அலுவலரும் கண்டுகொள்கிறார்களா, கண்டும் காணாததுபோல இருக்கிறார்களா? எனத் தெரியவில்லை என்று புலம்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்!